வேகமாக வளர்ந்து வரும் தனித்த மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ், அதன் புதிய ஹெல்த் இன்சூரன்ஸான ‘மணிபால்சிக்னா சர்வா’வை அறிமுகப்படுத்தியது. இது முழுமையான உடல்நலக் காப்பீட்டுத் தீர்வை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'சர்வா' - அனைவருக்கும், பரந்த வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு குறைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீட்டை வழங்குகிறது.
பாரதத்தின் நடுத்தர மக்கள் மீது இது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இது கணிக்க முடியாத உயர் மருத்துவ செலவினங்களுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்கி முழுமையான உடல்நலக் காப்பீடு மூலம் மக்களின் செலவு மற்றும் வறுமை நிலைக்கு செல்லவதை தடுக்கிறது
மணிப்பால் சிக்னா சர்வா மணிப்பால்சிக்னா சர்வா பிரதம், மணிப்பால்சிக்னா சர்வா உத்தம் மற்றும் மணிpபால்சிக்னா சர்வா பரம் என மூன்று வகைகளுடன் வருகிறது. சர்வா பிரதம் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 3 கோடி வரை விரிவான மருத்துவமனைக் காப்பீட்டை அனுபவிக்க முடியும். மேலும் 31 ஆம் நாள் முதல் தங்கள் கவரேஜைத் தொடங்குவதற்கான விருப்பக் காப்பீடு உள்ளது.
சர்வா உத்தம் திட்டத்தில் ‘சாரதி’ என பெயரிடப்பட்ட 31 வது நாளிலிருந்து காப்பீட்டைப் பெறுவதற்கான விருப்பத்துடன் பல விருப்பக் கவரேஜ்களுடன் விரிவான மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய கவரேஜை வழங்குகிறது. புற்றுநோய், இதயம், பக்கவாதம் மற்றும் முக்கிய உறுப்பு/எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான அளவற்ற மருத்துவ காப்பீட்டை அனந்த் பெனிஃபிட் வழங்குகிறது. இதன் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான காப்பீட்டு பலனைப் பெறலாம்.
சர்வா பரம் மூலம், வாடிக்கையாளர்களுக்கு முன்பே இருக்கும் மருத்துவ தேவைகள் மற்றும் குறிப்பிட்ட நோய்களுக்கு முதல் நாள் முதல் காப்பீடு பெறலாம். காத்திருப்பு காலம் தேவையில்லை. இந்த திட்டம் குல்லாக்-ஐ வழங்குகிறது - ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் உங்கள் போனஸைக் மொத்தமாக வழங்கும் உத்தரவாதம் அளிக்கப்படும்.
'சர்வா'வின் ஒவ்வொரு வகையிலும் நவீன மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் என இரண்டிற்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செலவாகும் தொகைக்கு கவரேஜை வழங்குகிறது.அனைத்து காப்பீடும் உடல் உறுப்பு தானம் தொடர்பான செலவுகளை உள்ளடக்கும், இதில் 30 நாட்கள் வரை வாடிக்கையாளரின் மருத்துவமனைக்குச் செல்லும் முன் மற்றும் பிந்தைய செலவுகள் அடங்கும். உபரி பலன் ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் முதல் க்ளைமைக்கு மட்டும் 1வது நாளிலிருந்து கிடைக்கும் காப்பீட்டுத் தொகையில் 100 சதவிதம் வழங்குகிறது.
அனைத்து 3 வகைகளும் 90 நாட்கள் வரை மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய காப்பீட்டையும், 180 நாட்கள் வரை மருத்துவமனைக்குப் பிந்தைய காப்பீடு மற்றும் ரூ. 3 கோடி வரை தனிநபர் விபத்துக் காப்பீட்டை வழங்குகின்றன. வாடிக்கையாளர்கள் காலாவதியாகும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன் பாலிசியை புதுப்பித்தால், அனைத்து திட்டங்களுக்கும் புதுப்பித்தல் பிரீமியத்தில் 2.5 சதவிதம் தள்ளுபடி கிடைக்கும்.
அறிமுக விழாவில் பேசிய மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரசுன் சிக்தர், "’மணிப்பால்சிக்னா சர்வா’ அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நாங்கள் ஒரு முழுமையான உடல்நலக் காப்பீட்டுத் தீர்வை அறிமுகப்படுத்துகிறோம். இது பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இந்தியாவில் நடுத்தர மக்களும் எளிதில் அணுகவும் குறைந்த விலையுடனும் கூடிய தீர்வுகளை வழங்கும். இதனுடன் 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு எனற அரசாங்கம் மற்றும் கட்டுப்பாட்டாளரின் இலக்கோடு ஒத்துப்போகிறது. ’மணிபால் சிக்னா சர்வா ட்ரினிட்டி’யின் ஒவ்வொரு காப்பீடும் சரியான அளவிலான கவரேஜை வழங்குவதற்கும், அனைவருக்கும் அத்தியாவசிய பாதுகாப்பு, எல்லையற்ற சக்தி மற்றும் உடனடி அமைதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'மணிபால்சிக்னா சர்வா' அனந்த் பெனிபிட் 4 முக்கிய உறுப்பு நோய்களுக்கு வரம்பற்ற காப்பீட்டை வழங்கும். குல்லாக் திட்டமானது உரிமைகோரல்களைப் பொருட்படுத்தாமல் 1000 சதவிதம் காப்பீட்டுத் தொகையை வழங்கும். சாரதி பெனிபிட் 31-ஆம் நாள் முதல் பலன்களை வழங்குகிறது” என்றார்.