மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் அலன் கேரியர் இன்ஸ்டிடியூட் தனது முதல் சோபான் 2024 வெற்றி விழாவை கோலாகலமாக கொண்டாடியது. சோபான் என்பது கல்வி மற்றும் பிரத்தியேக திறன்களில் சிறந்த சாதனைகளை நிகழ்த்திய மாணவர்களை கௌரவிக்கும் ஆண்டு விழா ஆகும். இதில் 1137 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தங்களது மகன்கள் மற்றும் மகள்ளும் ஐஐடி, நீட் மற்றும் ஒலிம்பியாட் போன்ற தேர்வுகளில் தகுதி பெற வேண்டும் என்ற கனவோடு இந்த மாபெரும் கொண்டாட்ட்த்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
ஆர். சிவகுமார் ஐபிஎஸ், ஐடோல் விங் சிஐடி - சென்னை, அவர்கள், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களை பாராட்டி, அவர்களது சாதனைகள் மேலும் உயர அறிவுரை வழங்கினார். சூர்ய கலா, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை துணை இயக்குநர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தன் அறிவு மற்றும் அனுபவத்தால் மாணவர்களையும் பெற்றோரையும் ஊக்குவித்தார். பேராசிரியர் ஏ. ரதினவேல் வேலம்மாள் மருத்துவ கல்லூரியின் முதல்வர், மாணவர்களை பாராட்டி, அவர்களின் கனவுகளை அடைய தன்னுடைய அனுபவங்களில் இருந்து சில முக்கிய அறிவுரைகளை பகிர்ந்து கொண்டார். திரு. தினேஷ் ஜி, ஜெயப்பிரியா கல்வி குழும இயக்குநர், நெய்வேலி அவர்கள், நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். விஜய லக்ஷ்மி, குழந்தைகள் உளவியல் நிபுணர், மன நலம் மற்றும் குழந்தைகளின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சிறப்பு கருத்தரங்கத்தை வழங்கினார். டாக்டர் செந்தில் குமார், கல்வி குழும பள்ளிகளின் தலைவர், கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது மாணவர்களின் வளர்ச்சிக்கு அவரது பாராட்டுகளை தெரிவித்தார். சக்தி பிரணேஷ், இயக்குனர், டெல்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி, மதுரை, மாணவர்களைப் பாராட்டி, மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மற்றும் நிறுவனங்களின் அக்கறை குறித்துப் பேசியதுடன், மாணவர்கள் தங்களது வெற்றியை உறுதிசெய்யும் வழிமுறைகளைப் பகிர்ந்தார்.இந்த சோபான் நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்த 20 பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6, 7, 8, 9, 10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் சிறந்த மாணவர்கள் 130 பேருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்ட்து. இந்த மாணவர்கள் அந்தந்த பள்ளி முதல்வர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆவர். மாணவர்களை கௌரவிக்க அவர்களின் பள்ளி முதல்வர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய பங்களிப்பிற்காக பள்ளி முதல்வர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இன்றைய நிகழ்வில், கேவிஎஸ் சென்டினரி பள்ளி, விருதுநகர், டெல்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி, மதுரை, இதயம் ராஜேந்திரன் ரெசிடென்ஷியல் பள்ளி, மதுரை, இந்திரா காந்தி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், கேவிஎஸ் ஆங்கில வழி பள்ளி, விருதுநகர், மகரிஷி வித்யா மந்திர், மதுரை, நாய்ஸ் சிபிஎஸ்இ பள்ளி, மதுரை, கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், ஓம் சதனா சென்ட்ரல் பள்ளி, மதுரை, பி.எஸ். சிதம்பர நாடார் பள்ளி, விருதுநகர், பாண்டுகுடி ஸ்ரீ லட்சுமி நாராயண வித்யாலயா, மதுரை, எஸ்பிசி அகாடமி, திண்டுக்கல், செயிண்ட் மைக்கேல் மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை, எஸ்பிஐஓஏ பள்ளி, மதுரை, திரிவேணி பள்ளி, மதுரை, வேதிக் வித்யாஸ்ரம், மதுரை ஆகிய பள்ளிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், அலனின் வருடாந்திர டாலண்டெக்ஸ் தேர்வில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து 2378 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற்ற சிறந்த 50 மாணவர்கள் வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப் பட்டனர். மேலும், மதுரை அலன் பயிற்சி மையத்தில், ஒலிம்பியாட்ஸ், ஐஐடி ஜேஇஇ மற்றும் நீட் (யுஜி) ஆகிய தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களில், ஏப்ரல் முதல் இன்றுவரை நடத்தப்பட்ட அகத் தேர்வில் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்ற 180 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களுடன் கௌரவிக்கப்பட்டனர். கோவை அலன் பயிற்சி மையத்தில், ஒலிம்பியாட்ஸ், ஐஐடி ஜேஇஇ மற்றும் நீட் (யுஜி) ஆகியவற்றுக்குத் தயாராகும் மாணவர்களில் ஏப்ரல் முதல் இன்றுவரை நடத்தப்பட்ட அகத் தேர்வில் தொடர்ந்து முதலிடத்தைப் பெற்ற 28 மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில், சென்னை அலன் மாணவர்கள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றது தொடர்பாக தங்கள் அனுபவங்களையும், ஐஐடி நீட் (யுஜி) தேர்வுகளில் வெற்றி பெற அவர்களின் தயாரிப்பு முறைகளையும் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தயாரிப்பின் ரகசியங்கள் மற்றும் கல்லூரி வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியதாக இருந்தன.
இந்த நிகழ்ச்சியில், கேவிஎஸ் விருதுநகர், டெல்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி மதுரை, வேதிக் வித்யாஸ்ரம் மதுரை மற்றும் ஆலன் மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கி, சோபான் விழாவை சிறப்பித்தனர். அனைத்து மாணவர்களும் அவர்களது கலை நிகழ்ச்சிகளுக்காக கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மொத்தம் 8 விதமான கலாச்சார நிகழ்ச்சிகளில்100 மாணவர்கள் பங்கேற்றனர்.
சந்தோஷ் சிங் - அலன் தமிழ்நாடு தலைமை அதிகாரி மற்றும் கணிதப் பாட ஆசிரியர் பேசுகையில், "மதுரை மற்றும் கோயம்புத்தூரின் திறமைகள் தொடர்ந்து உச்சத்தை அடைந்து, தேசிய ப்ரீமியர் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய தருணம். எங்கள் மாணவர்களை கௌரவிக்க, தங்களது நேரத்தை ஒதுக்கி, இங்கு வந்தருளிய மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அலன் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாணவர்களின் உழைப்பிற்கு என் சிறப்பு பாராட்டுக்கள். மாணவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிக் கொணர்ந்து, அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவிய ஆசிரியர் குழுவிற்கும் என் நன்றிகள்" என்றார்.
நாதெல்லா மோகன் கிருஷ்ணா - அலன் கோயம்புத்தூர் மைய தலைவர், பேசுகையில், "எங்கள் 28 மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்து கோயம்புத்தூருக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் சாதித்த வெற்றியின் மரபைத் தொடர்ந்து, அவர்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரிகளாக விளங்குகிறார்கள்" என்றார்.
மோடலி வெங்கட்ஹரிகிஷன் - அலன் தமிழ்நாடு வணிகத் தலைவர், பேசுகையில், "ஆலன் கேரியர் இன்ஸ்டிட்யூட் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனது பாதையை விரிவாக்கி, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் புதிய வழிகாட்டி மையங்கள் மற்றும் ரெசிடன்சியல் கேம்பஸ்களை தொடங்கவுள்ளது. இந்த மையங்கள் மாணவர்களின் கனவுகளை ஊக்குவிக்கும் வகையில், பலமான மற்றும் பராமரிப்பு முறைமை மூலம் அவர்களின் அக்கறைகளை வளர்க்கும். தமிழ்நாட்டின் மகள்கள் மற்றும் மகன்களின் வெற்றிக் கதைகளுக்கு, அலன் முதன்மையான தேர்வாக இருக்கும் என்பது நிச்சயம்,” என்றார்.
சீனிவாசபெருமாள் - அலன் மதுரை மைய தலைவர் பேசுகையில், "2025 ஆண்டில் ஆலன் மதுரை மாணவர்கள் ஐஐடி, ஜேஇஇ மற்றும் நீட் (யுஜி) தேர்வுகளில் சிறந்த நிலைகளை பெற்று, மதுரையை பெருமைப் படுத்துவார்கள். மதுரை மற்றும் விருதுநகர் பள்ளிகள் எமது மாணவர்களுக்கு வழங்கிய பேராதரவிற்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். நாங்கள் எங்களது மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சிப்போம். இன்று எங்கள் மாணவர்களை பாராட்டி ஆசீர்வாதம் வழங்கிய அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும் நன்றி கூறுகிறேன்,” என்றார்.