இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் , மதுரையில் நடைபெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடுகளுக்கான மாநாடான சிஎஸ்ஆர் கான்க்ளேவ்-2025-ல் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் காட்டிவரும் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக சுற்றுச்சூழல் மேன்மை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாபெரும் நிகழ்வை ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மதுரை இன்னோவேட்டர்ஸ் ரோட்டரி கிளப் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
புதுமையான முன்முயற்சிகள் மற்றும் நீண்டகால பலன்களை அளிக்கும் நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு செயல்பாட்டு முயற்சிகள் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவித்து வருவதன் மூலமும், தனது செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் வளங்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலமும், சமூக நலனை முன்னெடுப்பதன் மூலமும் ஜி ஸ்கொயர் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
6.86 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழலை பசுமையாக்கும் மாபெரும் முயற்சி, வீட்டுமனைகளைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களில் அழைத்து செல்லும் வசதி, தன்னுடைய வீட்டுமனைத் திட்டங்களில் சூரிய ஒளி மூலம் இயங்கும் விளக்குகளை நிறுவும் திட்டம் மற்றும் கடற்கரையை சுத்தம் செய்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகளை ஜி ஸ்கொயர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவையனைத்தும் பசுமையான எதிர்காலத்திற்காக ஜி ஸ்கொயரின் காட்டிவரும் அர்ப்பணிப்பையும், அக்கறையையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
இந்த மாபெரும் அங்கீகாரம் குறித்துப் பேசிய ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பால ராமஜெயம் , “ஜி ஸ்கொயர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை என்பது இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து செல்கின்ற ஒரு பொறுப்பு அல்ல. இயற்கையுடன் இணைந்து வாழும் எதிர்காலத்தை உருவாக்குவதில் இருக்கும் ஆத்மார்த்தமான உணர்வின் சாராம்சம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அங்கீகாரம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள சமூகங்களை உருவாக்குவதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு நீண்டகாலம் நீடிக்கும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் காட்டிவரும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது” என்று கூறினார்.