டாடா காபி கிராண்ட் 'தி ஷிக் ஷிக் ஷிக் பாடு’ பாடலுடன் புதிய பிரச்சாரத்தை வெளியிட்டது

 


டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்திலிருந்து  வெளிவரும் பேக்கேஜ் செய்யப்பட்ட காபி பிராண்டான டாடா காபி கிராண்ட், சர்வதேச காபி தினத்தன்று  புதிய இசை பிரச்சாரத்தை வெளியிட்டு இருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரம் மற்றும் கமகமக்கும் காபி பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. 'தி ஷிக் ஷிக் ஷிக் பாடு' என்ற புத்தம் புதிய காபி கீதம் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், தனது குரலுக்காக பாராட்டப்படும் டீ-யின் மயக்கும் குரலில் உருவாகி இருக்கிறது. லோவ் லிண்டாஸ், புத்தம் புதிய காபி கீதத்தை  அழகியலுடன் படம்பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டின் யதார்த்த வாழ்க்கை முறையைப் பற்றிய இந்த சமகாலப் பதிவானது, இசை ப்ரியர்கள் மற்றும் காபி ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இசை விருந்தாக அமையும் என்பது உறுதி.

முற்றங்களில் தாள நயத்துடன் தெறிக்கும் நீர்த்திவலைகள், புள்ளிகளில் மாயஜாலம் காட்டும்வகையிலான கோலங்களை வரையும் தருணங்கள், ஜதியுடன் மனம் மயக்கும் பரதநாட்டியக் கொலுசுகள் மற்றும் ஊஞ்சலைப் போல் அசைந்தாடும் தண்டட்டி காதணிகளின் தனித்துவமான ஓசை, காலைக் காற்றில் கலக்கும் மீனவர்களின் உற்சாகமான முழக்கங்கள் என இவை அனைத்தும் கலந்து மெல்லிசையாக 'ஷிக் ஷிக் ஷிக்' - ஒலி. டாடா காபி கிராண்ட் கீதத்தில் ஒலிக்கின்றன. மனம் மயக்கும் இந்த காபி கீதம், தமிழ்நாட்டில் காலை நேர காபியின் மீதுள்ள ஈடு இணையற்ற அன்பைத் ஆத்மார்த்தமாக பிரதிபலிக்கிறது.

டாடா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் இந்தியா அண்ட் தெற்காசியாவின் பேக்கேஜ்டு பானங்கள் பிரிவுத்  தலைவர் புனித் தாஸ் 'தி ஷிக் ஷிக் பாடு' காபி கீதம் பற்றி பேசுகையில், "இந்த வசீகரிக்கும் காபி கீதத்தை  தமிழ்நாட்டு மக்களுக்காக வழங்குவதற்காக, சந்தோஷ் நாராயணன் மற்றும் டீ ஆகிய இருவருடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எளிதில் இந்த மறக்கமுடியாத இசைக் கீதம், டாடா காபி கிராண்டின் 'ஷிக் ஷிக் ஷிக்' என்று அடையாளப்படுத்தும் வாக்கியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது காபி பேக்கை அசைப்பதன் மூலம் உருவாகும் ஒலியும், சுவையுடன் கூடிய டிகாஷன் துளிகள் தளும்பும் ஒலியும் இதில் நுணுக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இசையுடன் கூடிய மறக்கமுடியாத உள்ளூர் காட்சிகள் மூலம், ஒவ்வொரு காலைப் பொழுதிலும் ஊக்க சக்தியாகத் திகழும் காபிக்கும் அதன்  கலாச்சாரத்திற்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்" என்றார்.

பிரபல பின்னணி பாடகி டீ தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டு பேசுகையில், "இது இந்த பிராண்டுக்கான எனது முதல் பாடல் ஆகும். இதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! இந்தப் பாடலும், இது உருவான விதமும் என் மனதிற்கு மிக நெருக்கமான ஒன்றாகி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம், ஒலிகள், காபி மீதான ஆழமான வேரூன்றிய அன்பைக் கொண்டாடும் விதம் ஆகியவை இந்தப் பாடலில் உள்ளன" என்றார்.

முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறுகையில், "டாடா காபி கிராண்டிற்காக இந்த பாடலைப் உருவாக்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! குறிப்பாக, தமிழ்நாட்டின் தனித்துவமான காலை நேர ஒலிகளை ஒரே பாடலாக இணைத்து உருவாக்குவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மக்களின் இதயத்தில் தவிர்க்க முடியாத இடத்தில் காபி நீண்ட காலமாக இருந்து வருகிறது. 'ஷிக் ஷிக் ஷிக்', போன்ற இதன் தனித்துவ ஒலிகளை மக்கள் நேசித்துத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்!" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form