தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்து குறைந்தது 5000 தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்

 


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடி மற்றும் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் இந்த மாநாடு நடக்கிறது. இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி, தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சுரண்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு ஆயத்தமாவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 6ம்தேதி அன்று நடந்தது. இதில்  600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்து 5000 பேர் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அரசியல் களத்தில் இளம் தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் வகையில் டிஜிட்டல் அரசியல் பயிற்சி பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினர்களாக போரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் அமைப்பின் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன் கலந்து கொண்டு பேசினார்.



அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற என்னென்ன டிஜிட்டல் டூல்ஸ்கள் உள்ளது, தொழில்நுட்பங்களை எவ்வாறு தேர்தல் களத்தில் பயன்படுத்த வேண்டும், டிஜிட்டல் பிரச்சார யுத்திகள், பிரச்சார மேலாண்மை, வாக்காளர் அணுகுமுறை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பகிர்ந்தார். வேட்பாளராக நிற்பவர்கள் வெற்றி பெறுவது பற்றி அதிகமாக யோசித்து செயல்படுவதை விட, எதிராக நிற்கும் வேட்பாளரை தோற்கடிக்க என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்து செயல்பட வேண்டும். இதன் மூலம் புதிய புதிய யோசனைகள் பிறக்கும். அரசியலுக்கும், தேர்தலுக்கும் எங்களிடம் டிஜிட்டல் கருவிகள் உள்ளன. அந்தக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, அதன் பலன்கள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கூட்டத்திற்கு என்னை இங்கு அழைத்து வந்த சுரண்டை தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

மதுரை, கமலம் வெஞ்சர்ஸ் தலைவர் ஜே.கே.முத்து அரசியல் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பேசுகையில், இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிக முக்கியம். அரசியலுக்கு வந்திருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்க வேண்டும், உட்கட்சிக்குள் போட்டி அரசியல் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அப்படி வந்தால் நிர்வாகிகளுக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

அரசியலில் ஊடகங்களின் பங்கு குறித்துப் பேசிய, சமுத்ரா பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனர் சமுத்ரா செந்தில், டிஜிட்டல் தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் கட்சி குறித்தோ, தலைவர்கள் குறித்தோ தவறான பதிவு ஏதும் வந்தால், பதிலுக்கு தவறான கருத்துக்களைச் சொல்லாமல், உண்மையை விளக்கிச் சொல்லவேண்டும். இதில் இருந்தே உங்களது ஆக்கப்பூர்வமான அரசியல் தொடங்க வேண்டும், பத்திரிகைகளில் வரும் செய்திகளை டிஜிட்டல் மீடியாக்களில் அதிக அளவில் பகிர்வதன் மூலம் உங்கள் பகுதி வாக்காளர்களை கவர முடியும். இந்த டிஜிட்டல் பிரச்சாரம் வாக்குகளாக மாறும், என்றார்.

இந்நிகழ்வில் சுரண்டை தலைமை கழக நிர்வாகிகள் ப.கணேசன், ஆ.வெற்றிவேல்ராஜன், சு.மாரிசெல்வம், ஆ.சரவணன், மனசு முத்துக்குமார், வெ.அரவிந்த், மா.முகிலன், சரத், ஏ.ராஜா, கிருஷ்ணமூர்த்தி மனோகர், சிவா, செ.சுதன், எம்.மதன், ஜெ.சேதுஅபிஷேக், எம்.ஆனந்த், ஏ.பூர்ணலிங்கம், டி.அர்ஜின் நாகராஜ், ஆர்.கே ரமேஷ்,கோபால்  மற்றும் கழக நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி அகரக்கட்டு அ.தேவசகாயம், தென்காசி முத்துக்குமார், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் சரவணன், ஸ்ரீதர், கனகராஜ், கேபிரியல், மணி,  கடையம் ஒன்றிய தலைவர் லெட்சியகாந்தன். இளைஞரணி ஐயப்பன்,ஆலங்குளம் தொகுதி ஏ.இம்மானுவேல் ராஜன், பத்மநாபன், வழக்கறிஞர் விஜய், ராம்குமார்  குத்துக்கல் வலசை சுடலை குமார், ராமசாமி, பாலாஜி, பாபநாசசிவன், மகளிர் அணி முத்துமாரி சுதா, மாரியம்மாள், சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக நிர்வாகிகள் பேச்சிமுத்து, எம்.வி.பாலு, கணேசன், ரவி, மகேந்திரன், முருகன், பரங்குன்றாபுரம் கதிர்வேல் சுரேஷ், உதயா,இளங்கோ தெற்கு மாவட்டம் கே.அலெக்ஸ், மத்தாளம்பாறை முருகன் பரமேஷ், கல்லுத்து ஏ.காளிதாஸ் பி.சிவரி மற்றும் கள்ளம்புளி மாணிக்கம், சின்னதம்பிநாடானுர் உதய், ராஜா மற்றும் தென்காசி மாவட்ட தளபதி ரசிகர்கள்,  தொண்டர்கள் பொதுமக்கள் உற்பட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form