ஸ்கோடா ஆட்டோ இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவி அறிவிப்புடன் இந்தியாவில் பிராண்டை வளர்ப்பதற்கான தனது லட்சியங்களை தெளிவுபடுத்தியது. ஒரு நாடு தழுவிய பெயரிடும் பிரச்சாரம் காரணமாக ‘கைலாக்’ அதன் பெயரைப் பெற்றது. இது 2024 நவம்பர் 6 அன்று உலகளவில் அறிமுகமாகும். இந்தியாவின் மொத்த கார் சந்தையில் கிட்டத்தட்ட 30 சதவிதம் வைத்திருக்கும் ஸ்கோடா ஆட்டோ, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றான சப்-4 எம் பிரிவில், கைலாக் வாகனத்தைக் கொண்டிருக்கும். கைலாக் வாகனத்தின் அறிமுகம் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் ஒரு 'புதிய சகாப்தம்’ ஆகும், இது ஐரோப்பாவிற்கு வெளியே பிராண்டின் மிக முக்கியமான சந்தையாகும்.
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா மேலாண் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பியூஷ் அரோரா பேசுகையில், "ஸ்கோடா இந்தியாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவியான கைலாக் வாகனத்தை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன். எங்கள் 'மேக் இன் இந்தியா' உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், கைலாக் உயர் மட்ட உள்ளூர்மயமாக்கலுடன் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட கைலாக் வாகனம், இந்தியாவில் மிகப் பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்’ என்றார்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில், "எங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதே, எங்கள் வளர்ச்சி மூலோபாயத்தின் முக்கிய பகுதியாகும். இது ஸ்கோடா குடும்பத்திற்கு அதிக வாடிக்கையாளர்களை வரவேற்க உதவும். எங்கள் அறிமுகங்களில் புதிய எஸ்யூவி கைலாக் வாகனத்தைச் சேர்க்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவில் மிகப் பெரிய அறிமுகமாக இது விளங்கும். இந்தியப் பயணத்தில் இந்த அறிமுகம் மிகப் பெரிய பெரிய மைல் கல்லாகும், எங்களது சந்தைப் பங்கை இரட்டிப்பாக்க இது உதவுமென நம்புகிறோம். கைலாக் வாகனம் அறிமுகத்திற்குக் கிட்டத்தட்ட தயாராக உள்ளது, பாதுகாப்பு மற்றும் இயக்கவியல் விஷயத்தில் தரவரிசையில் முன்னிலை வகிப்பது நிச்சயம்’ என்றார்.
கைலாக் வாகனம் நிரூபிக்கப்பட்ட மற்றும் திறமையான டிஎஸ்ஐ இயந்திரத்தால் இயக்கப்படுகிறது, இது ஆறு வேக கைமுறை இயக்கம் அல்லது ஆறு வேக தானியங்கி பரிமாற்றத்தின் தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 கிலோவாட் ஆற்றல் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த வாகனம் குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற எம்க்யூபி-ஏஓ-ஐஎன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆறு ஏர்பேக்குகள், டிராக்ஷன், ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், பிரேக் டிஸ்க் வைப்பிங், ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன், மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், எலக்ட்ரானிக் டிஃபெரன்ஷியல் லாக், பயணிகள் ஏர்பேக் டி-ஆக்டிவேஷன், மல்டி கொலிஷன் பிரேக்கிங் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்ட. 25க்கும் மேற்பட்ட விபத்து ஏற்பட்ட பிறகு பாதுகாப்பைத் தரும் பாசிவ் அம்சங்களையும், விபத்தே ஏற்படாமல் பாதுகாக்கும் ஆக்டிவ் அம்சங்களையும், கொண்டிருக்கும்.
டிரைவர் மற்றும் பயணிகளுக்குப் போதிய இடம் மற்றும் வசதியை வழங்கும். கைலாக் வாகனம் முதல் தரமான ஆறு வழி சரி செய்யக்கூடிய ஓட்டுனர் மற்றும் பயணிகள் இருக்கைகளை, காற்றோட்டமுள்ள செயல்பாட்டுடன் வழங்கும். நகர்ப்புறம், நெடுஞ்சாலை, மலைப் பிரதேசம் மற்றும் கரடுமுரடான சாலைகள் உட்பட 8,00,000 கிமீக்கும் மேற்பட்ட இந்திய நிலப்பரப்பில் கைலாக் வாகனம் கடுமையான பரிசோதனை ஓட்டங்களைச் செய்துள்ளது.
இது பூமியிலிருந்து சந்திரனுக்கும் பிறகு சந்திரனிலிருந்து பூமிக்குத் திரும்பும் தூரத்தை விடவும் அதிகம். பூமியை 20 முறைகளுக்கும் மேலாகச் சுற்றி வந்த தூரமாகும். இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி -100 முதல் + 850 செல்சியஸ் வரையிலான வெப்பநிலையிலும், கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்திலும் தாங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாக் வாகனத்தின் 100 மாதிரிகள் நிமிடத்திற்கு 25-30 லிட்டர் / சதுர மீட்டர் தண்ணீரில் 160 வரை கோணத்தில் பரிசோதிக்கப்பட்டன.
இந்தப் பரிசோதனை மூலம் தீவிர பருவமழைகளிலும், கைலாக் வாகனம் பூஜ்ஜியம் நீர் நுழைவைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது. அனைத்து சாலை மேற்பரப்பு ஒட்டங்களிலும், உட்புறங்கள் அமைதியாகவும் சத்தமின்றி இருப்பதையும் உறுதி செய்வதற்காகக், வாகன ஷேக்கர் சோதனைக்குக் கைலாக் உட்படுத்தப்பட்டது. கடுமையான வெயில் அல்லது பிற வெளிப்புற கூறுகள் காரணமாக அனைத்துப் பாலிமெரிக் பாகங்களிலும் நிறமாற்றம், சிதைவு அல்லது செயல்பாட்டு இழப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, இரண்டு ஆண்டுகள் திறந்த வெளியில் கைலாக் வாகனம் நிறுத்தப்பட்டது. கைலாக் வாகனம் 189 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனைத்துத் தடைகளையும் சமாளிப்பதை உறுதி செய்தது.
கூரை மற்றும் பிற இணைப்புகள் லேசர்-பிளேஸ் செய்யப்பட்டவை. கைலாக்கின் வடிவியல் அமைப்பு ரோபாட்டிக் தொழில்நுட்பத்தைக் கொண்டது. சேசீஸின் இன்லைன் அளவீடுகள் இரண்டு இடங்களில் செய்யப்பட்டுள்ளன மற்றும் அசெம்பிளி லைனில் உள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், இயந்திர மேற்பரப்பில் உள்ள மாறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை ஆய்வு செய்கின்றன. மேலும் ஹாட்-ஸ்டாம்ப் செய்யப்பட்ட எஃகு, மறுவேலை க்ராஷ் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றுடன் கைலாக் வாகனம் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதால், இந்தப் பிரிவில் சிறந்து விளங்குகிறது.