ஐசிஐசிஐ பேங்க், டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் செயலியில் முன் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ-ல் உடனடி கடனை வழங்க போன் பே உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்தது. ஐசிஐசிஐ பேங்க் இன் மில்லியன் கணக்கான முன்-அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, போன்பே செயலியில் குறுகிய கால கிரெடிட் லைன் ஐ உடனடியாக செயல்படுத்தவும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஒரு தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் இதைப் பயன்படுத்தவும் இந்த கூட்டாண்மை உதவுகிறது.
45 நாட்கள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ₹2 லட்சம் வரை யுபிஐ மீது இந்த வங்கி கிரெடிட் லைன் ஐ வழங்குகிறது. எலக்ட்ரானிக்ஸ், பயணம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள், பில் செலுத்துதல் மற்றும் பல போன்ற உயர் டிக்கெட் வகைகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பண்டிகை காலங்களில் இந்த வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரெடிட் லைன் பல்வேறு யுபிஐ பேமெண்ட் அப்ளிகேஷன்கள் முழுவதும் ஒன்றோடொன்று இயங்கக்கூடியது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு யுபிஐ பேமெண்ட் செயலியையும் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் வசதியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் போன் பே-ல் உள்நுழைந்து பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள கிரெடிட் ஆக்டிவேஷன் பேனரைக் கிளிக் செய்யவும். தயாரிப்பு அம்சங்கள், கட்டணங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்து, செயல்படுத்துவதற்குத் தொடரவும். அனைத்து அங்கீகார நடைமுறைகளையும் முடிக்கவும். கிரெடிட் லைன் அங்கீகரிக்கப்பட்டதும், வாடிக்கையாளர் அதை யுபிஐ உடன் இணைத்து, ஒரு யுபிஐ பின்னை அமைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம்.
ஐசிஐசிஐ பேங்க் இன் பேமென்ட் சொல்யூஷன்ஸ் - ப்ராடக்ட் ஹெட் நிராஜ் ட்ரல்ஷாவாலா கூறுகையில், “மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி எளிதாக கடன் அணுகலை வழங்குவதற்காக ஐசிஐசிஐ பேங்க் இல் நாங்கள் போன் பே உடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பண்டிகைக் காலத்திற்கு ஆயத்தமாகின்ற சூழலில், ஐசிஐசிஐ பேங்க் இன் முன்-அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தங்கள் பண்டிகைக் கால ஷாப்பிங் தேவைகளுக்கு போன் பே-ல் பணம் செலுத்த உடனடியாக இந்த கிரெடிட் லைன் ஐ செயல்படுத்தலாம். தடையற்ற டிஜிட்டல் கடனை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த வழங்கல் எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட வங்கி அனுபவத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்."என்றார்.
இந்த கூட்டாண்மை பற்றி கருத்து தெரிவிக்கையில், போன் பே-ன் பேமெண்ட்ஸ் இன் தலைவர் தீப் அகர்வால், “எங்கள் தளத்தில் முன்-அங்கீகரிக்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ வழங்குவதற்கான கிரெடிட் லைன் ஐ நீட்டிக்க ஐசிஐசிஐ பேங்க் உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மையானது, போன் பே செயலியினுள் இருந்து உடனடியாக ஒரு முழுமையான டிஜிட்டல் பயனர் அனுபவத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான குறுகிய காலக் கடனைப் பெற உதவும். போன் பே-ல், இந்த தயாரிப்பின் அணுகல் மற்றும் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், மேலும் ஐசிஐசிஐ பேங்க் உடனான இந்த கூட்டாண்மை அந்த திசையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்” என்றார்.