மிந்த்ராவின் பிக்ஃபேஷன் திருவிழா ஆரம்பம்



மிந்த்ரா தனது பிக் ஃபேஷன் திருவிழாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேதிகளை வெளியிட்டது. 2024 செப்டம்பர் 26 அன்று தொடங்கும் இந்த நிகழ்வு போட்-ஐ அதன் முக்கிய ஸ்பான்சராகப் பார்க்கிறது. இத்திருவிழாவில் சுமார் 3.4 மில்லியன் அளவில் மிகப்பெரும் ஸ்டைல்கள் இடம்பெறும், இது முந்தைய நிகழ்வைவிட 47 சதவிதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. 

இந்த நிகழ்வில் உள்நாட்டு, சர்வதேச மற்றும் உள்ளூரைச் சேர்ந்த  9700க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் பங்கேற்பைக் காணலாம். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகைகளில் நிறைய புராடக்டுகளின் விருப்பத்தேர்வு உள்ளதால், ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் சிரமமப்படுவார்கள். மிந்த்ரா இன்சைடர்ஸ், மிந்த்ராவின் லாயல்டி திட்டத்தின் உறுப்பினர்கள் செப்டம்பர் 25ஆம் தேதி 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிக் ஃபேஷன் திருவிழாவிற்கான ஆரம்ப அணுகலைப் பெறுவார்கள்.

இந்த ஆண்டுத் திருவிழா வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்பை வழங்கும் புதுமையான சலுகைகளால் நிரம்பியுள்ளது. கூடுதலாக, பிக் ஃபேஷன் திருவிழாவானது சிறப்புச் சலுகைகளுடன் ‘பிராண்ட் ஆஃப் தி டே’ கொண்டிருக்கும், இது வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளின் தேர்வுகளை இதுவரை இல்லாத மதிப்பில் அணுக அனுமதிக்கிறது. மிகவும் மதிப்பு-உந்துதல் வியாபாரத்தில் முக்கியமானவற்றில் ஒன்று என்னவென்றால் ’1 வாங்குகள் 4 பெறுங்கள்’ என்பதாகும், இது வாடிக்கையாளர்கள் தங்கள் மிகுந்த விருப்பத்திற்கு ஏற்றவாறு ஷாப்பிங் செய்வதற்கும் பண்டிகைக் காலத்தில் தங்கள் அலமாரிகளைப் புதுப்பிப்பதற்கும் இணையற்ற வாய்ப்பாகும்.

 ஒருவர் டிரென்டி அவுட்ஃபிட்ஸ், டைம்லெஸ் கிளாசிக் அல்லது ஸ்டேட்மென்ட் ஃபீசெஸ் தேடினாலும், ஆண்களின் அக்கேஷன் மற்றும் கேஷுவல் ஆடைகள், & பெண்களின் எத்தினிக் ஆடைகள் மற்றும் வெஸ்டர்ன் ஆடைகள், அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, வீடு, காலணிகள், நகைகள், வாட்சுகள், அணிகலன்கள் உட்பட மிந்த்ரா பல்வேறு வகைகளில் பரந்த அளவிலான விருப்பங்களை வழங்கும். மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், கடந்த பண்டிகைக் காலத்தில் இருந்து 3700 புதிய பிராண்டுகளை மிந்த்ரா இதில் சேர்த்துள்ளது. பிஎஃப்எஃப்-இன் போது மிந்த்ரா தனித்துவமான ஹீரோ கலைக்ஷன்களையும் கொண்டிருக்கும்.

பிஎஃப்எஃப் குறித்து பேசிய மிந்த்ராவின் வருவாய் மற்றும் வளர்ச்சியின் மூத்த இயக்குனர் நேஹா வாலி, "பிக் ஃபேஷன் திருவிழாவின் இந்த நிகழ்வு ஷாப்பிங் மட்டுமல்ல; இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை ஃபேஷன் அனுபவத்தை மறுவரையறை செய்வதாகும். மிந்த்ராவின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்வேறுபட்ட சேவைகள், சர்வதேச, உள்நாட்டு மற்றும் உள்ளுர் பிராண்டுகளின் எங்கள் தேர்வுக்கு கூடுதலாக, ஷாப்பிங் அனுபவத்தை உண்மையிலேயே தடையற்றதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும்” என்றார்.

இந்நிகழ்வின்போது, வாடிக்கையாளர்கள் மிந்த்ராவின் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, கோடக் மஹிந்திரா வங்கியுடன் இணைந்து, தங்கள் வாங்குதல்களுக்கு அதிக மதிப்பைத் திறக்க, கூடுதலாக 7.5 சதவிதம் +5 சதவிதம் தள்ளுபடியைப் பெறலாம். ஐசிஐசிஐ, கோட்டக், ஆக்சிஸ் போன்ற நிதி வங்கிகள் மூலம் போன்பே-வில் இருந்து உறுதிசெய்யப்பட்ட கேஷ்பேக்குகளுக்கு கூடுதலாக, வாங்குபவர்கள் பண்டிகைக் காலத்தில் வாங்கும்போது 10 சதவிதம் வரை தள்ளுபடியைப் பெறலாம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form