கியூஜே மோட்டார் மற்றும் மோட்டோ மோரினி பைக்குகளில் சலுகைகளை அறிவித்த ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா



இந்தியாவின் முன்னணி சூப்பர் பைக் பிராண்டுகளில் ஒன்றான ஆதீஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் லிமிடெட் வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கு தயாராகும் விதமாக பிரபல கியூஜே மோட்டார் மற்றும் மோடோ மொரினி ரக சூப்பர் பைக்குகளுக்கு பிரத்தியேக சலுகைகளை வழங்குகின்றன. ப்ரீமியம் மோட்டார் பைக்குகளை பலரும் எளிதாக அணுக உதவும் விதமாக ஆரி நிறுவனம் இந்த அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது.

கியூஜே மோட்டார்-இன் க்ளாசிக் எஸ்ஆர்சி சீரிஸ் பைக்குகள் இப்போது நம்பமுடியாத விலைகளில் கிடைக்கின்றன; எனவே இந்த பாரம்பரியமான ரெட்ரோ-வகை மோட்டார்பைக்குகள் உங்களது பண்டிகை கொண்டாட்டங்களை முழுமையடைச் செய்யும். முதலில் ₹1.79 லட்சம்* என்கிற அசல் விலையை கொண்டிருந்த எஸ்ஆர்சி 250, தற்போது வெறும் ₹1.49 லட்சத்திற்கு கிடைக்கிறது - அதாவது ₹30,000 ஆதாயம்! எஸ்ஆர்சி 500-ஐ தற்போது ₹1.99 லட்சத்திற்கு வாங்கலாம். இந்த பைக்கினை வாங்கும் வாடிக்கையாளர்கள் ₹40,000 வரை சேமித்து மகிழலாம்.

காலத்தால் அழியாத வடிவமைப்பும் அதிநவீன தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்த எஸ்ஆர்சி 250, எஸ்ஆர்சி 500,  எஸ்ஆர்வி 300 மற்றும் எஸ்ஆர்கே 400 உள்ளிட்ட கியூஜே மோட்டார் பைக் ரகங்களின் ஆரம்ப விலை, தற்போது வெறும் ₹1.49 லட்சம்* முதல் துவங்குகின்றன.முன்னணி இத்தாலிய சூப்பர் பைக் பிராண்டான மோட்டோ மொரினியின் எக்ஸ்-கேப் 650 பைக்கின் விலையில் ₹1.31 லட்சம் சலுகை போக ₹5.99 லட்சத்திற்கு கிடைக்கிறது. எக்ஸ்-கேப் 650எக்ஸ் ரகமும் வெறும் ₹6.49 லட்சம் என்ற விலைக்கு கிடைக்கிறது, இதில் ₹1.01 லட்சம் வரை சேமிக்கலாம். எக்ஸ் கேப் 650 மற்றும்  எக்ஸ் கேப் 650எக்ஸ் சூப்பர் பைக்குகள் மட்டுமில்லாமல், செய்மெஸ்ஸோ ரெட்ரோ ஸ்ட்ரீட் மற்றும் ஸ்கிராம்ப்ளர் மோட்டோ  உட்பட - மொரினி பைக் ரகங்களில் 650சிசி ரேஞ்சில் 4 மாடல்கள் உள்ளன என ஆதீஷ்வர் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form