கொலுமம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்கள் குழு ஐசிஐசிஐ பேங்க் இன் முழுமையான உறுதிப்பாட்டினாலும் ஒரு ஆதரவினாலும் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளனர். மீன்வளை தொழிலில் சுயஉதவி குழுவானது சிறிய அளவில் மீன்பிடி வலைகளை வாடகைக்கு கொடுத்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்தது.
ஆனால் இந்த பெண்கள் பெரிய அபிலாஷைகளைக் கொண்டிருந்தனர். ஐசிஐசிஐ பேங்க் இன் கடனுதவி மற்றும் சுய உதவிக் குழுவை ஊக்குவிக்கும் நிறுவனமான விடியல் சோஷியல் சர்வீஸ் டிரஸ்ட் இன் வழிகாட்டுதல் ஆகியவற்றுடன், அவர்கள் தங்களுடைய சொந்த மீன்பிடி வலைகளைத் தயாரிப்பதில் இறங்கினார்கள்.
மே 2023 இல் ஒரு கடனைப் பெற்றதிலிருந்து, கொலுமம் கிராமத்தில் உள்ள எஸ்எச்ஜி உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை அனுபவித்துள்ளனர். தங்கள் குழந்தைகள் பிரகாசமான எதிர்காலத்தை அனுபவிப்பதை உறுதிசெய்கின்ற அதிகரித்த வருமானத்துடன், அவர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த முடிந்தது.
அவர்களின் வருமானம் படிப்படியாக அதிகரித்து வருகின்றதுடன் இந்தக் குழு கொலுமம் கிராமத்தில் மீன்பிடி வலைகளின் நம்பகமான சப்ளையர் என்ற ஒரு நற்பெயரை படிப்படியாக கட்டியெழுப்பியுள்ளது. கூடுதல் நிதியானது, அவர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்ற மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வகையில், ஒரு ஜெனரேட்டர் மற்றும் மின்சார மோட்டார் போன்ற அத்தியாவசிய உபகரணங்களில் முதலீடு செய்யவும் அவர்களுக்கு உதவியது.
இன்று இவர்களின் வியாபாரம் செழித்து வருகிறது. இந்த பெண்கள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கியது மட்டுமல்லாமல், உற்பத்தியை அதிகரிக்க நவீன உபகரணங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.இந்த பெண்களை மேம்படுத்துவதன் மூலம், ஒரு சிறிய கடன் கூட மாற்றத்தின் ஒரு அதிர்வு விளைவை உருவாக்க முடியும் என்பதை ஐசிஐசிஐ பேங்க் நிரூபித்துள்ளது.