இந்தியாவின் முன்னணி சூப்பர்பைக்ஸ் பிராண்டுகளில் ஒன்றான ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு தயாராகும் விதமாக பெனல்லி மற்றும் ஸோன்டெஸ் சூப்பர்பைக்கினை வாங்குபவர்களுக்கு பிரத்தியேக சர்வீஸ் பலன்களை சிறப்பு சலுகையாக வழங்கவுள்ளது.
இதன் மூலம், இந்த பண்டிகைக் காலத்தில் சாகச பயணத்தை விரும்புவோருக்கு அட்டகாசமான சிறப்பு சலுகைகளுடன் பெனல்லியின் பெனல்லி டிஆர்கே மாடல் சூப்பர்பைக்ஸை சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ₹30,000* மதிப்புள்ள 2 வருட சிறப்பு காம்ப்ளிமெண்டரி சர்வீஸுடன் அவர்கள் தங்களுக்கு பிடித்த சூப்பர் பைக்கினை வாங்கலாம். இவற்றின் விலை ₹5.85 லட்சம் முதல் துவங்குகிறது.
அதன் புதுமையான வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த அதிநவீன அம்சங்களுக்கு பெயர்பெற்ற ஸோன்டெஸ் சூப்பர் பைக்ஸும் இந்த பண்டிகைக் கால சலுகையின் கீழ் கிடைக்கிறது. ஸோன்டெஸ் 350ஆர், 350எக்ஸ், ஜிகே350, 350டி மற்றும் 350டி அட்வான்ஸ்ட் உள்ளிட்ட ஸோன்டெஸ் 350சிசி ரக சூப்பர் பைக்ஸை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் ₹20,000* மதிப்புள்ள 2 வருட சிறப்பு காம்ப்ளிமெண்டரி சர்வீஸை பெறலாம்.
இவற்றின் விலை ₹2.79 லட்சம் முதல் துவங்குகிறது. அட்டகாசமான இந்த சிறப்பு சலுகைகளைப் பெற உங்களுக்கு அருகாமையில் உள்ள அங்கீகரிக்கப்பட டீலரை அணுகுங்கள். ஆதீஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்துடன் இந்த பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள், என்று ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு நிறுவனம் தெரிவித்துள்ளது.