RSWM-ன் புதிய தயாரிப்புகள் திருப்பூர் சந்தையில் அனைவரையும் ஈர்த்தது



எல்என்ஜே பில்வாரா குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஆர்எஸ்டபிள்யூஎம்  லிமிடெட், திருப்பூரில் யார்னெக்ஸ் 2024 இல் பங்கேற்று அமோக வரவேற்பைப் பெற்றது. தரம் மற்றும் நிலைத்தன்மைக்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அறியப்படும் ஆர்எஸ்டபிள்யூஎம், தொழில்துறையில் அதற்கான இடத்தை பதிவு செய்து அதன் தயாரிப்புகள் திருப்பூரில் வாங்குவோரின் விருப்பமான தேர்வாக இருப்பதை உறுதிசெய்தது. 

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவரும், ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவருமான டாக்டர். ஏ சக்திவேல், கே.எம் நிட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் கே.எம். சுப்ரமணியன் மற்றும் பின்னல் துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அகில் எஸ் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலையில் நிறுவனம் தனது வீட்டு ஜவுளிகள், பின்னப்பட்ட உடைகள் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான தயாரிப்புகளின் தொகுப்புகளை வெளியிட்டது.

 உலகளாவிய கருப்பொருள் சார்ந்த வண்ணங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆடை தொகுப்புகளானது ஆர்எஸ்டபிள்யூஎம்-ன் நிலைத்தன்மை மற்றும் தனித்துவமான முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றன. திருப்பூரில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து நிறுவனம் நல்ல நேர்மறையான தாக்கத்தைப் பெற்றது. 

இது உயர்தர நூல்கள் மற்றும் துணிகளை உற்பத்தி செய்வதில் ஆர்எஸ்டபிள்யூஎம்-ன் நற்பெயரை மேலும் உயர்த்தியது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சேவை செய்வதற்கான அர்ப்பணிப்புடன் அதிக அளவில் நிலைத்தன்மையை வழங்குகிறது. வளர்ச்சியுடன் கூடுதலாக, ஆர்எஸ்டபிள்யூஎம் திருப்பூரில் அதன் செயல்பாடுகளுக்குள் நிலைத்தன்மையை கொண்டுவர கவனம் செலுத்துகிறது. உலகளாவிய நிலைத்தன்மை தரநிலைகளுடன் ஒத்துப்போகும் சூழலுக்கு உகந்த முயற்சிகளை நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஒரு முக்கிய ஜவுளி மையமாக தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஆர்எஸ்டபிள்யூஎம் ஆனது வாடிக்கையாளர் சார்ந்த வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள உற்பத்தியை மையமாகக் கொண்டு, பிராந்தியத்தில் அதன் தடத்தை விரிவுபடுத்த எண்ணம் கொண்டுள்ளது. திருப்பூரில் அதன் இருப்பை மேலும் மேம்படுத்த, ஆர்எஸ்டபிள்யூஎம்  அதன் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்த முக்கிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 நிறுவனம் தனது கூட்டாளர்களை தொடர்ந்து சந்திப்பது மற்றும் தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அதன் தயாரிப்புகளை வழங்கும். வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்துவதுடன், ஆர்எஸ்டபிள்யூஎம் ஆனது திருப்பூரில் அதன் உள்கட்டமைப்பு மற்றும் தளவாடத் திறன்களை மேம்படுத்தியுள்ளது.

ஆர்எஸ்டபிள்யூஎம் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் பி.எம். சர்மா கூறுகையில், "திருப்பூர் சந்தையில் எங்களின் வளர்ச்சியானது தரம், புதுமை மற்றும் நிலையான நடைமுறைகளில் ஆர்எஸ்டபிள்யூஎம்-ன் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். முன்னணி பிராண்டுகளுடன் எங்கள் கூட்டாண்மைகளை ஆழமாக்குவதன் மூலமும், எங்கள் செயல்பாட்டு திறன்களை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும், நாளுக்கு நாள் பல மாற்றங்களைக் காணும் சந்தை மாற்றத்தின் தேவைகளை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். தெற்கு சந்தையில் எங்களை விரிவுபடுத்த, எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பரந்த தொழில்துறைக்கும் உயர்தர, சூழல் ரீதியான தீர்வுகளை வழங்கும் தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form