அமேசான் இந்தியா நிறுவனம், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது வாடிக்கையாளர் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான பருவ கால வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் தனது தற்போதைய நெட்வொர்க்கில் ஆயிரக்கணக்கான பெண் பணியாளர்களையும், அதில் 1900 மாற்றுத்திறனாளிகளையும் பணிக்கு அமர்த்தியுள்ளது.
இது குறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தில், பண்டிகை கால பணியமர்த்தலில் பணிவாய்ப்பை பெற்ற பணியாளர்களில் ஒருவரான நேகா தேவி கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்கும் அமேசான் இந்தியா நிறுவனத்தில் ஒரு பணியாளராக இருப்பதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அமேசான் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிறுவனம் நடத்தும் விதம், தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் நிறுவனத்துக்கு பங்களிப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.
இது குறித்து அமேசான் நிறுவனத்தின் ஆபரேஷனல் துணைத் தலைவர் அபினவ் சிங் கூறுகையில்,"எதிர்வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சேவை செய்யக்கூடிய பின் குறியீடுகளிலும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான முறையில் பொருட்களை விநியோகம் செய்ய ஒரு லட்சத்து 10 ஆயரத்துக்கும் அதிகமான பணியாளர்களை நாங்கள் பணியமர்த்தி உள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளவர்கள், பண்டிகை காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து அமேசான் உடன் பணிபுரிகின்றனர், மேலும் பல அமேசான் உடன் பணிபுரிய வருடா வருடம் மீண்டும் பணிக்கு வருவதாகவும், அவர்கள் பணிபுரிந்தாலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது” என்றார்.