நாகர்கோவிலில் உள்ள குளச்சல் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் ஆரம்பகால வாழ்க்கையில் நிதி நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும், மூன்று குழந்தைகளுடன் மீனவர் மனைவியாகவும் இருந்த அவர், வாழ்க்கையைச் சாமாளிப்பதில் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டார். மீன்பிடித்தலில் இருந்து வரும் நிலையற்ற வருமானம் அதிக கடன்களுக்கு வழிவகுத்தது, மேலும் அவரது குடும்பத்தை பார்த்து கொள்வதற்கான பொறுப்புகள் அவரது தோள்களில் அதிக சுமையாக இருந்தது. கோவிட் தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் அவரது குடும்பத்தின் நிதி நிலைமையை மேலும் கடினமாக்கியது. தனது நிலைமை மோசமாவதை உணர்ந்து நிலையான வருமானத்தை வழங்கக்கூடிய வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். அவரது இலக்கு எளிதானது ஆனால் மிக முக்கியமானதாக இருந்தது. மாதம் ரூ. 10,000 வருமானம் ஈட்டி உடனடி தேவைகளையும் கடன்களையும் கட்ட வேண்டிய சூழலில் இருந்தார்.
இந்த தேடலின் போது அல்போன்ஸ் ஸ்வீடிஷ் நல்வாழ்வு பிராண்டின் நேரடி விற்பனைத் திறனைக் கண்டுபிடித்து அதைத் தொடர்பு கொண்டார். ஒவ்வொரு சிறிய சாதனையும் ஒரு சிறந்த வாழ்க்கையை நோக்கிய படிக்கல்லாக இருக்கும் என்பதை புரிந்து கொண்ட அவர் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். ஒரு புதிய வணிக மாதிரியைக் கற்றுக்கொள்வதில் சவால்கள் இருந்தபோதிலும், அல்போன்ஸின் உறுதிப்பாடு ஒருபோதும் மாறவில்லை. அவரின் கடின உழைப்பு விரைவாக பலனளிக்கத் தொடங்கியது. அல்போன்ஸின் மாற்றம் வெறும் தொழில்முறை மாற்றம் மட்டும் அல்ல. அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. அவரது வணிகம் வளர வளர, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறமையும் உடன் வளர்ந்தது. அவரது கடின உழைப்பு, அவரது சமூகத்தில் உள்ள பலரை நிதி சுதந்திரத்துடன் தங்கள் சொந்தக் கனவுகளைத் தொடர தூண்டியது.
மூன்றே ஆண்டுகளில், அல்போன்ஸ் தனது வாழ்க்கையை சமாளிக்கும் போராட்டத்திலிருந்து, தொழில்முனைவோர்களின் செழிப்பான வலையமைப்பை வழிநடத்தும் நிலைக்குச் சென்றார். இன்று, அவரது அமைப்பு பல்வேறு நிலைகளில் ஏராளமான இயக்குநர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அவர் வழிகாட்டியாக இருந்து ஊக்கமளித்துள்ளார். சக ஊழியர்களுடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சிகரமான பயணங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத அனுபவங்கள் இப்போது அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். தற்போது முக்கியமாக அல்போன்ஸ் தனது குழந்தைகளுக்கு தரமான கல்வி உட்பட சிறந்த வாய்ப்புகளை வழங்க முடிகிறது.
அல்போன்ஸின் பயணத்தில் மிக முக்கியமான தருணம் அவரது சொந்த கார் வாங்கியது. அது அவரது நிதி மாற்றத்தின் அடையாளமாகவும், அவரது முழு குடும்பத்திற்கும் பெருமையாகவும் இருந்தது. பெரும் முரண்பாடுகளைக் கடப்பதன் மூலம் வரும் ஒரு சாதனை உணர்வை அவர் உணர்ந்தார். அல்போன்ஸ் மேரியின் கதை தனிப்பட்ட வெற்றியின் கதையை விட பெரிதாகும். அவரைப் போன்ற சூழ்நிலைகளில் உள்ள பலருக்கு இது ஒரு உத்வேகம் அளிக்கும். உறுதிப்பாடு, சரியான வாய்ப்பு மற்றும் கற்கவும் வளரவும் விருப்பத்துடன் ஒரு வேலையைச் செய்தால் ஒருவரின் வாழ்க்கையை வியத்தகு முறையில் மாற்றியமைக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. ஓரிஃப்ளேம் உடனான தனது பணியின் மூலம் அல்போன்ஸ் தனது சொந்த வாழ்க்கையை மாற்றியது மட்டுமல்லாமல், சரியான ஆதரவு மற்றும் மனநிலையுடன், எவரும் துன்பங்களை வென்று தங்கள் கனவுகளை அடைய முடியும் என்பதை அல்போன்ஸ் நிரூபித்துள்ளார்.