உலகில் உள்ள லென்ஸுகள் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனம் எசிலர் ஆகும். இந்தியாவின் விளம்பர தூதுவராக பிரபல கிரிக்கெட் விராட் கோலி மூலம் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. விராட் கோலி அறிமுகப்படுத்தும் விளம்பரத்தின் முதல் கட்டத்தில் ஐஜென், எசிலர் ஆகியவற்றில் ஒற்றை பார்வைக்கு தேவையான லென்ஸ்கள், டிஜிட்டல் சாதனங்களை நீண்ட காலமாக பார்த்து பணி செய்வதின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை இதன் மூலம் சரிசெய்ய சிறந்த தேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர காட்சிகள் டிஜிட்டல் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் காட்சிகளை சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல், கண் சோர்வு மற்றும் சோர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
ஐஜென் லென்ஸ்களை அணிந்தவர் ஆன விராட் கோலி அதன் நன்மைகள், டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்களால் கண்கள் சோர்வடைவதை குறைக்கும் வகையிலும் காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்பட உள்ளது. நீலம் - ஊதா நிறங்கள் கொண்டவையாக தெரியும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளது ஒரு தனித்துவமான கலவையாகும். விராட் கோலி நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது காட்சிகள் வெரிலக்ஸ் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. ப்ரஸ்பயோபியா தொடர்புடைய பார்வை குறைபாடு உள்ள பிரச்சனைகளை சரி செய்ய இந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த விளம்பர பிரச்சார திரைப்படம் விராட் கோலி வேறொரு கோணத்தில் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வெரிலக்ஸ் நன்மைகளையும் இந்த காட்சி மூலம் வெளிப்படுத்துகிறார்.
இந்த விளம்பரத்தில் வரும் காட்சிகள் மிகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காட்சிகளில் வரும் இரண்டு பேரும் ஒரு உணவகத்தில் அமர்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள், அங்கு விராட் கோலி தனது பயிற்சியாளரின் கவனிக்கத்தக்க நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார், அவர் நெருங்கிய தொலைவில் டிஜிட்டல் சாதனத்தை பார்க்கும் பொழுது பார்வை நன்றாக தெரியும் வகையிலான முன்னேற்றம் இல்லாத லென்சை அணிந்து உள்ளார் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. இது போன்ற சிரமங்களை தவிர்க்கவும், சிறந்த பார்வை திறனை பெறவும் தனது பயிற்சியாளர் வெரிலக்ஸ் லென்ஸ்களை பயன்படுத்த முயற்சிக்குமாறு விராட் கோலி அறிவுறுத்துகிறார். இந்த விளம்பர காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
எசிலர் லக்ஸொடிக்கா தெற்காசியாவின் தலைவர் நரசிம்மன் நாராயணன் கருத்து கூறுகையில், எசிலர்-ல், உலகளாவிய விளையாட்டு சின்னமான விராட் கோலி உடன் எங்கள் வணிக இணையை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஐஜென் மற்றும் வெரிலக்ஸ் போன்ற சிறந்த தயாரிப்புகளை கண்டறியும் அதே வேலையில், அனைத்து தரப்பு வயதினருக்கும் தெளிவான மற்றும் ஆரோக்கியமான பார்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான எங்கள் நோக்கங்கள், விராட் கோலியின் அற்புதமான ஒத்துழைப்பும் தங்கள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க உறுதுணையாக இருக்கும்” என்றார்.
இந்த விளம்பரம் குறித்து விராட் கோலி பகிர்ந்து கொண்ட தகவலில், "நான் ஒரு ஐஜென் லென்ஸ் அணிந்துள்ளவன் என்று அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி. எசிலர் உலக அளவில் பார்வை பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. மேலும் அவர்களின் புதுமையான தயாரிப்புகள் மற்றும் ஒவ்வொரு லென்ஸ் தனிப்பட்ட பார்வை பராமரிப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
நெட்வொர்க் அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் என்பது விராட் கோலி உடன் புதிய விளம்பர பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள அதிகாரப்பூர்வமான நிறுவனம் ஆகும். இன் நெட்வொர்க்கிங் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி சயோந்தி பால், பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள தனது நுண்ணறிவை பகிர்ந்து கொண்டார். வாடிக்கையாளர்கள் நிஜ வாழ்க்கையில் அவர்கள் அங்கீகரிக்கும் ஒரு தரப்பு பொருளை பயன்படுத்தும் ஒரு பிரபலத்துடன் பணியாற்றுவது கிடையாது என்றார். நூறு விழுக்காடு உண்மையான மற்றும் உண்மையான பயன்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் இந்த விளம்பர நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இது தன்னைப் பொறுத்தவரை, ஆரோக்கியத்தில் உண்மையான அக்கறை கொண்ட பக்கத்து வீட்டு மகனாக விராட் கோலி இந்த விளம்பர பிரச்சாரத்தின் மூலம் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுடன் பணி புரிந்ததில் முழுமையான மகிழ்ச்சியாக இருந்ததாக கூடிய அவர், திரையில் விராட் கோலி தோன்றும் நேரம் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும், ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதல் பற்றி நாடு முழுவதும் தொலைக்காட்சி, சமூக மற்றும் டிஜிட்டல் சேனல்களில் வெளிப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.