குழந்தைகள் இயல்பாகவே ஆர்வமுள்ளவர்கள், பெற்றோர்கள் எப்போதும் அவர்களின் ஆர்வத்தைத் தணிக்கும் துல்லியமான பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். இது அமேசான் அலெக்சாவால் நியமிக்கப்பட்ட மற்றும் கான்டரால் ஜூன் 2024 இல் ஆறு நகரங்களில் உள்ள 750க்கும் அதிகமான பெற்றோர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெளிவாகத் தெரிகிறது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பெற்றோர்களில் சுமார் 54 சதவிதம் பேர் குழந்தைகளின் கேள்விகளுக்கு உடனடி பதில்கள் இல்லை என்று அடிக்கடி கருதுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 52 சதவிதம் பதிலளித்தவர்கள் தங்களுக்கு பதில் தெரியாவிட்டால் உடனடியாக துல்லியமான பதிலைத் தேடுகிறார்கள் என்று அது மேலும் சுட்டிக்காட்டுகிறது. 44 சதவிதம் பெற்றோர்கள் தாங்களாகவே உடனடி பதில்களை உருவாக்குவதாக ஒப்புக்கொண்டனர். கணக்கெடுக்கப்பட்டதில் 3 சதவிதம் பெற்றோர்கள் மட்டுமே கேள்வியைப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குழந்தை கேள்விகளைக் கேட்பதைத் தடுக்க தலைப்பை மாற்றுகிறார்கள். குழந்தைகள் கேள்விகளைக் கேட்கும்போது, தாங்கள் அடிக்கடி தடுமாறிவிடுவதாக கணக்கெடுக்கப்பட்ட பெற்றோர்களில் 60 சதவிதம் பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். கணக்கெடுப்புக் குழுவில் 37 சதவிதம் பேர் தங்கள் குழந்தைகளை மற்ற பெற்றோரிடம் (அம்மா/அப்பா) தங்கள் கேள்விகளைக் கேட்கச் சொல்வதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
குழந்தைகள் டிவி பார்க்கும் போது அதிக கேள்விகள் கேட்பதாக ஆய்வு விரிவாகக் கூறுகிறது. இதில் 63 சதவிதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் போது அதிக ஆர்வத்துடன் கேள்விகள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். பயணம், படிப்பு, வெளிப்புற நடவடிக்கைகள், கையடக்க சாதனங்களில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது மற்றும் பெரியவர்களிடையே நடக்கும் உரையாடல்களைக் கேட்பது ஆகியவை குழந்தைகளிடையே ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து செயல்பாடுகள் என ஆய்வு தெரிவித்துள்ளது.
80 சதவிதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க உதவும் தகவல்களைக் கண்டறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கெடுப்பு மேலும் கூறுகிறது. அலெக்சா (எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற சாதனங்களில் கிடைக்கும்) உள்ளிட்ட குரல் ஏஐ சேவைகள் போன்ற தொழில்நுட்பங்கள் பெற்றோருக்கு பெரும் உதவியாக இருக்கும். ஏனெனில் இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு தகவல் அல்லது பதில்களைக் கண்டறிய உதவுகிறது. எனவே, குழந்தைகள் ஆர்வமாக கேள்வி கேட்கும் போது, அறிவியல் முதல் வரலாறு மற்றும் அதற்கு அப்பால் பல்வேறு தலைப்புகளில் எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் பெற்றோர்கள் அலெக்ஸாவின் உதவியைப் பெறலாம்.
90 சதவிதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து வளரவும் புதிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதிக கேள்விகளைக் கேட்க ஊக்குவிக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். எக்கோ பாப் மற்றும் எக்கோ டாட் போன்ற அலெக்ஸா ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் குழந்தைகளுக்கான குரல்-மூலம் ஈர்க்கக்கூடிய பல அனுபவங்கள் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வத்தை தூண்டும் உள்ளடக்கத்துடன், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை வழங்கலாம்.
அமேசான் இந்தியா அலெக்ஸாவின் நாட்டு மேலாளர் திலிப் ஆர்.எஸ் பேசுகையில், "அறிவு சார்ந்தவர்களிடம் குழந்தைகள் தன்னிச்சையான கேள்விகளைக் கேட்பது அல்லது தங்கள் வயதிற்கு மூத்தவர்களிடம் கேள்வி கேட்பது என குழந்தைகள் இயல்பாகவே ஆர்வமாக இருப்பார்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய பதில்களைத் தேடுவார்கள். பெற்றோர்கள் அவர்களின் கேள்விகளுக்கு தகவலறிந்த, புரிந்துகொள்ள எளிய, ஆக்கபூர்வமான மற்றும் வயதுக்கு ஏற்ற வழிகளில் பதிலளிப்பது மிகவும் முக்கியம். இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அலெக்ஸாவிடம் மாதத்திற்கு 25 மில்லியன் கேள்விகளைக் கேட்கின்றனர். அலெக்சா பெற்றோருக்கு தகவல் மற்றும் கற்றல் மையமாக மாறியதற்கு ஒரு சான்றாகும்” என்றார்.
காந்தார் தெற்காசியா, நுண்ணறிவுப் பிரிவின் நிர்வாக இயக்குநர் தீபேந்தர் ராணா கூறுகையில், "தொலைக்காட்சியைப் பார்ப்பது குழந்தைகளிடையே அதிக ஆர்வத்தைத் தூண்டுகிறது மற்றும் அவர்கள் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களைப் பற்றி மேலும் கேள்விகளைக் கேட்க வழிவகுக்கிறது - கணக்கெடுக்கப்பட்ட பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திரையில்லா கற்றலை வழங்கவே விரும்புகிறார்கள். இங்குதான் குரல்-மூலம் தேடுதல் ஆரம்பித்து பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் அவர்கள் முன்னிலையில் செய்தாலும், பதில்களைக் கண்டறியவும் உலகத்தைப் பற்றி அறியவும் ஒரு சிறந்த திரை-இல்லாத தீர்வாக இருக்கிறது” என்றார்.