3 தசாப்தங்களாக மறுசுழற்சி செய்யப்பட்ட காகித அடிப்படையிலான கோடட் டூப்ளக்ஸ் போர்டு தயாரிப்புகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மும்பையை தளமாகக் கொண்ட த்ரீ எம் பேப்பர் போர்டு லிமிடெட் நிறுவனம் அதன் எஸ்எம்இ ஐபிஓ மூலம் ரூ.39.83 கோடியை திரட்டவுள்ளது. நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ லிமிடெட்-ன் எஸ்எம்இ தளத்தில் பட்டியலிடப்படும். பொது வெளியீடு ஜூலை 12 அன்று சந்தாவிற்காக திறக்கப்பட்டு ஜூலை 16 அன்று முடிவடைகிறது. இந்த வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது இயந்திரங்களை வாங்குதல், தொழிற்சாலை கட்டிட விரிவாக்கம், கடன்களை திருப்பிச் செலுத்துதல், செயல்பாட்டு மூலதன உட்செலுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்கான வணிக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும். கம்ஃபர்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் இந்த வெளியீட்டுன் முன்னணி மேலாளர் ஆகும்.
ரூ. 39.83 கோடியைக் கொண்ட ஆரம்ப பொதுப் பங்கீடு மொத்தமாக 57,72,000 ஈக்விட்டி பங்குகளை கொண்டுள்ளது. இது ரூ. 10 விலையில் தலா ஒரு பங்குக்கு ரூ. 67-69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ரூ. 14 கோடியை மூலதனச் செலவினங்களுக்காக பயன்படுத்தும். இதில் பிளாஸ்டிக் எரியும் குறைந்த அழுத்த கொதிகலன் கொண்ட பிளாஸ்டிக் வாங்குவது உட்பட அடங்கும். இது மின்சார உற்பத்திக்காக கழிவு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி மின் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது. சேமிப்புத் திறனை அதிகரிக்க தொழிற்சாலை கட்டிட விரிவாக்கம் மற்றும் உற்பத்தி வேகத்தை அதிகரிக்க ஒரு ஷீட் கட்டர் கையகப்படுத்துதல் ஆகியவற்றையும் இந்த நிதி ஆதரிக்கும்.
ரூ. 10 கோடி செயல்பாட்டு மூலதனத்திற்காகவும், ரூ. 7 கோடிகள் டேர்ம் லோனை திருப்பிச் செலுத்துதலுக்கு பயன்படுத்தும். இது செயல்பாடுகளைச் சீராகச் செய்யும், பணப்புழக்க நிர்வாகத்தை மேம்படுத்தும் மற்றும் வட்டிச் செலவுகளைக் குறைக்கும். மீதமுள்ள நிதி பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் வெளியீட்டுச் செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படும். விண்ணப்பத்திற்கான குறைந்தபட்ச அளவு 2,000 பங்குகள் ஆகும், இது ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1.38 லட்சம் ஆகும். ஐபிஓவிற்கான சில்லறை முதலீட்டாளர் ஒதுக்கீடு நிகர சலுகையில் 35 சதவிதத்துக்கும் குறைவாக இல்லாமலும், எச்என்ஐ ஒதுக்கீடு சலுகையில் 15 சதவிதத்துக்கும் குறைவாக இல்லாமலும், கியூஐபி பகுதி சலுகையின் 50 சதவிதத்துக்கு குறைவாக இல்லாமலும் வைக்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் சிப்லுனில் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி நிலையம் 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஆண்டுக்கு 72,000 டன்கள் (டிபிஏ) நிறுவப்பட்ட திறன் மற்றும் 4 மெகாவாட் கேப்டிவ் பவர் பிளான்ட் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த நிதியாண்டில், நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் ரூ. 272.23 கோடி, ஈபிஐடிடிஏ ரூ. 27.07 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 11.35 கோடி. முந்தைய நிதியாண்டின் 21.66 கோடியுடன் ஒப்பிடுகையில் ஈபிஐடிடிஏ 25 சதவிதமாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் நிகர லாபம் 6.62 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 170 சதவிதமாக அதிகரித்துள்ளது. நிறுவனம் ஈபிஐடிடிஏ மார்ஜினை முந்தைய ஆண்டில் 6.57 ஆக இருந்தது நடப்பு ஆண்டில் 9.94 சதவிதமாக அதிகரித்துள்ளது. மேலும், பிஏடி வரம்பு முந்தைய ஆண்டில் 2.01சதவிதமாக இருந்து நடப்பு ஆண்டில் 4.11 சதவிதமாக அதிகரித்துள்ளது.