2 புதிய வேரியண்ட்களில் அறிமுகமாகும் மோட்டோ ஜி85 5ஜி

 


இந்தியாவின் தலை சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா மோட்டோ ஜி85  5ஜி அறிமுகப்படுத்தப்படுவதை அறிவித்தது. ஆலிவ் கிரீன் (வேகன் லெதர்), கோபால்ட் ப்ளூ (வேகன் லெதர் தோல்), அர்பன் கிரே (அக்ரிலிக் க்ளாஸ் - பிஎம்எம்ஏ) ஆகிய மூன்று பிரீமியம் பான்டோன் க்யூரேட்டட் வண்ணங்கள் மற்றும் ஃபினிஷ்களில் கிடைக்கும், கருவி 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம் அல்லது 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கும் - மற்றும் ஃபிலிப்கார்ட், மோட்டோரோலா.இன் மற்றும் ஜூலை 16 ஆம் தேதி பிற்பகல் 12 மணியிலிருந்து மற்றும் இந்தியா முழுவதும் முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும். 

சலுகை விலையாக 8ஜிபி + 128ஜிபி ரூ. 16,999 மற்றும் 12ஜிபி + 256ஜிபி ரூ. 18,999க்கு கிடைக்கும். முன்னணி வங்கிகளின் கிரடிட் கார்டுகள் மற்றும் கிரடிட் கார்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மோட்டோ ஜி85  5ஜி  குறைந்த எடையுடனான (172 கிராம்) சூப்பர் ஸ்லீக் (7.59 மிமீ) வடிவம் மற்றும் அதன் எண்ட்லெஸ் எட்ஜ் வடிவமைப்பு, கர்வ்ட் டிஸ்ப்ளே மற்றும் பின்புற உள்ளமைப்புக்களுடன் ஒரு நவநாகரீக தோற்றத்தை வழங்குகிறது. 6.7 இன்ச் போலெட் கர்வ்ட் எண்ட்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே, இன்ஃபினிட் கான்ட்ராஸ்ட், 10 பிட் டெப்த், டிசிஐ - பி3 கலர் கேமட் தொழில்நுட்பம், கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, 120 ஹர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எஸ்ஜிஎஸ் ஐ ப்ரோடெக்ஷன், 1600 நிட்ஸ் உட்சபட்ச ஒளிர்வுத் திறன் அம்சங்களுடன் வருகிறது.மின்னல் வேக பிராசசரின் ஆற்றலுடன் ஸ்மார்ட் கனெக்ட் அம்சத்துடன் வருகிறது. ஸ்மார்ட் கனெக்ட் ஆனது, பயனர்கள் தங்கள் அனைத்து ஆப்களையும் ஒரு வெளிப்புற மானிட்டரில் பயன்படுத்த அனுமதிப்பதோடு புளூடூத்  கீபோர்டு மற்றும் மவுஸையும் இணைத்துக் கொள்ளும் வசதியை வழங்கி நேரடியாக ஸ்மார்ட்போனிலிருந்தே டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது. 

ஆழ்ந்த உணர்வுடனான அதிவேக மல்டிமீடியா அனுபவத்தை உறுதிப்படுத்த, அதன் மிக அற்புதமான காட்சியமைப்புடன் இணைந்து டால்பி அட்மாஸ்-இன் பல பரிமாண ஒலியையும் வழங்குகிறது. இரண்டு சக்திவாய்ந்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டர்போபவர் 33வாட் சார்ஜர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 2 ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் ஆண்ட்ராய்டு 16 க்கு உறுதிசெய்யப்பட்ட மேம்படுத்தல்களுடன் ஒரு அதிநவீன ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது.

 50எம்பி முதன்மை கேமரா சோனி லிடியா 600 சென்சார், க்வாட் பிக்சல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. கூடுதலாக, இதன் ஆல்-பிக்சல் ஃபோகஸ் குறைந்த-ஒளி சூழமைவுகளில் அதி வேகமான, துல்லியமான செயல்திறனை வெளிப்படுத்த அதிகளவில் 32மடங்கு ஃபோகசிங் பிக்சல்களை வழங்குகிறது மற்றும் இதன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் தேவையற்ற கேமரா இயக்கம் காரணமாக மங்கலான படங்கள் மற்றும் வீடியோக்களை தானாகவே ஈடுசெய்கிறது. இதன் இரண்டாம் நிலை பின்புற கேமரா ஒரு 8எம்பி அல்ட்ராவைடு + மேக்ரோ விஷன் கேமரா ஆகும். முன் புறத்தில் பயனர்களுக்கு குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைரெசல்யூஷன் 32எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இது குறைந்த-ஒளியளவுகளில் 4மடங்கு அதிக உணர்திறனை வெளிப்படுத்தி சிறந்த முடிவுகளை எட்டும் வகையில் ஒவ்வொரு நான்கு பிக்சல்களையும் ஒரே பிக்சலாக ஒன்றிணைக்கிறது. அனைத்துப் புகைப் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஒரு ஹோம் ஆக இருக்கும் கூகிள் ஃபோட்டோஸ் இல் இவை அனைத்தும் தானாகவே காப்பு நகல் எடுக்கப்பட்டு ஒழுங்கமைத்து சேமிக்கப்படுகின்றன. கூடுதலாக, மேஜிக் எடிட்டர், மேஜிக் எரேசர், போட்டோ அன்ப்ளர் மற்றும் இன்னும் பல உடபட அற்புதமான எடிட்டிங் மற்றும் எஐ கருவிகளுக்கான அணுகலை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

 விஒஎன்ஆர் ஆதரவுடன் 13 5ஜி பாண்டுகளையும், 4க்கு4 எம்ஐஎம்ஒ, மற்றும் விதிவிலக்கான 5ஜி செயல்திறனுக்கான 4 கேரியர் ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது. க்வால்காமின் சமீபத்திய புத்தம் புதிய ஸ்நாப்டிராகன் 6எஸ் ஜென் 3 பிராசசருடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி சேமிப்பகத்தை 1 டிபி வரை விரிவாக்கிக் கொள்ளலாம். ரேம் பூஸ்ட் 3.0 அம்சம் கூடுதல் வேகம் மற்றும் செயலாக்கம் தேவைப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் சேமிப்பகத்தை தற்காலிகமாக 24GB வரையிலான விர்ச்சுவல் ரேம் ஆக மாற்றுகிறது.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த மொபைல் பிசினஸ் குரூப்-இந்தியா நிர்வாக இயக்குநர் நரசிம்மன் டி.எம். " மோட்டோ ஜி85 5ஜி எங்களின் பிரபலமான எட்ஜ் சீரிஸின் விதிவிலக்கான சிறப்பம்சங்களை மென் மேலும் குறைந்த விலையில் வழங்குகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது வழங்கப்படும் கருவிகளை விட பன்மடங்கு உயர்ந்த ஒன்றாக திகழும் இந்தத் தயாரிப்பானது, ஈடு இணையற்ற ஸ்மார்ட்போன் அனுபவங்களையும், தொடர்புகளையும் திறம்பட ஆராய்வதற்கான அதிகாரத்தை தனிநபர்களுக்கு வழங்குகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form