மதுரையில் ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தின் புதிய கிளை திறப்பு



வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் நம்பர் 1 மிக்சர் கிரைண்டர் பிராண்டான ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ், மதுரை காமராஜர் சாலையில் தனது புதிய அதிநவீன சர்வீஸ் சென்டரை பிரமாண்டமாகத் திறப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. மதுரை சிட்டி சென்டரில் வசதியாக அமைந்துள்ள இந்த புதிய சேவை மையம் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை விற்பனைக்குப் பிந்தைய சிறப்பான சேவையை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யாமல் நேரடியாக செல்லலாம் மேலும் தயாரிப்புப் பொருட்களின்  உத்தரவாதத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் பொருட்களில் உள்ள தொழில்நுட்பக் குறைகளை சரிசெய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவை மையத்தின் துவக்கம் தனிச்சிறப்புவாய்ந்த சேவையை வழங்குவதற்கான இப்பிராண்டின் உறுதிப்பாடு மற்றும்  விரிவாக்கத்தைக் குறிக்கிறது அத்துடன் "வாழ்நாள் இலவச சேவை" என்ற அதன் வாக்குறுதியையும் உறுதி செய்கிறது.

இப்புதிய சேவை மையம் நவீனமயமான வசதியுடன் சிறப்பான சேவையை வழங்குவதற்காக உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டுள்ளது. இந்த மையம் அனைத்து ப்ரீத்தி உபகரணங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, புதிய உதிரிப் பாகங்களை மாற்றித் தருதல்,  மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும். வாடிக்கையாளர்கள் இப்போது புதிய சேவை மையத்திற்குள் சென்று 45 நிமிடம் முதல் 1 மணிநேரத்திற்குள் தங்கள் பொருட்களில் உள்ள தொழில்நுட்பக் குறைகளை சரிசெய்து கொள்ள முடியும்.

இந்தத் திறப்புவிழா குறித்து பேசிய வெர்சுனி இந்தியாவின் மேலாண்மை இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான குல்பஹார் தௌராணி, “எங்கள் புதிய அதிநவீன சேவை மையத்தை மதுரையில் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வசதி, எங்கள் நுகர்வோர் மீதான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை உள்ளடக்கி, தனிச்சிறப்புவாய்ந்த தயாரிப்புப் பொருட்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவையையும் வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.  இந்த புதிய மையம், ஈடு இணையற்ற திருப்தியையும் விரிவான ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துவதற்கு ஒரு சான்றாகும், எங்கள் வாடிக்கையாளர்கள் ப்ரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் உடன், விற்பனைக்குப் பிந்தைய காலகட்டத்திலும் தொந்தரவு இல்லாத, வளமான அனுபவத்தை இது உறுதிசெய்கிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form