ஸ்கோடா ஆட்டோ இந்தியா உலகளவில் அதன் 129ஆவது ஆண்டையும், இந்தியாவில் அதன் 24ஆவது ஆண்டையும் கொண்டாடி வருகிறது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அனைத்தும் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிவிப்புடன், ஸ்கோடா ஆட்டோ இந்திய இந்தப் புத்தம் புதிய வாகனத்தின் இரண்டாம் காட்சியை வழங்கியது. உலக அறிமுகம் இந்தியாவில் 2025இல் நடைபெறும்.
ஸ்கோடவின் வரவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி வாகனம் எமக்யூபி - ஏஓ-ஐஎன் இயங்கு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. 4 மீட்டர் கால்தடத்தைப் பாராமரிக்கும் அதே வேளையில், பெரிய மகிழுந்தின் இயக்கவியல், கையாளுதல் மற்றும் சாலைப் பழக்க வழக்கங்களுக்கும் உறுதியளிக்கிறது. ஸ்கோடா ஆட்டோவின் மாடர்ன் சாலிட் வடிவமைப்பு மொழியின் கூறுகள் பற்றிய குறிப்புகளை இந்த வடிவமைப்பு விளம்பரம் சுட்டிக் காட்டியது. நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக மாடர்ண்ட் சாலிட் வடிவமைப்பு மொழியைத் தனது அனைத்து புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி-இல் அறிமுகப்படுத்துகிறது. சீரற்ற, மேடு பள்ளம் நிறைந்த சாலை மேற்பரப்புகளைச் சமாளிக்கச், சக்கரத்தைச் சுற்றி அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தாராள இட வசதியை இந்த ஸ்கோடா எஸ்யூவி கொண்டிருக்கும். செழுமையான மற்றும் துல்லியமான டிஆர்எல் லைட் சிக்னேசர் ஆகியவையும் உண்டு. வரவிருக்கும் எஸ்யூவி மகிழுந்தின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் உள்ள ஆறுகோண வடிவம் மேலும் மதிப்பைத் தரும். இந்தியாவில் சப் 4 மீட்டர் எஸ்யூவி பிரிவில், அனைத்து புதிய காம்பேக்ட் எஸ்யூவி, போட்டியிடும். இது, இந்தப் பிரிவில், பிராண்டின் முதல் முயற்சி ஆகும். மேலும், இந்த அனைத்தும் புத்தம் புதிய வாகனம் மூலம், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க, நிறுவனம் முற்றிலும் புதிய சந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
வடிவமைப்பு விளம்பரம் வெளியீடு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர், பீட்டர் ஜெனேபா கூறுகையில் ‘அனைத்தும் புத்தம் புதிய எஸ்யூவி அறிவிப்புடன் 2024ஆம் ஆண்டைத் தொடங்கினோம். எங்கள் காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவிலுள்ள அனைத்து வகையான சாலைகளிலும் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்பட்டு வருகிறது. எங்கள் தயாரிப்பு ஏற்பாடுகள், உயர் திறன்கள், தரமான உள்ளூர் வழங்குநர்கள் ஆகியோருடன் இணைந்து தொடர்ந்து சிறந்த நுணுக்கங்களை மேம்படுத்தி வருகிறோம். இந்தியச் சாலைகளில் ஐரோப்பிய தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்க புதிய காம்பேக்ட் எஸ்யூவி வழிவகுக்கும். அது மிகப் பெரிய வாகன தளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், எங்களது காம்பேக்ட் எஸ்யூவி, காம்பேக்ட் கால்தடத்தில் ‘பெரிய மகிழுந்து’ என்னும் உணர்வைப் பெறும். ஐரோப்பாவிற்கு வெளியே தயாராகும் பெரும்பான்மை ஸ்கோடா மகிழுந்துகள், உள்நாட்டில் இந்தியத் தொழிற்சாலைகளில் தயாராகி, உலகின் 14 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன’ என்றார்.