தமிழ்நாட்டில் மறு அறிமுகமாகும் சந்திரிகா சோப்



ஆயுர்வேதத்தில் 80 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட புகழ்பெற்ற சோப் பிராண்டான சந்திரிகா, விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங்கில் இருந்து, "இரட்டை ஆயுர்வேதத்தின் மூலம் இரட்டை நன்மைகள்"  என்ற தனித்துவம் வாய்ந்த முன்மொழிவுடன் தமிழ்நாட்டில் அது மீண்டும் தொடங்குவதை அறிவித்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புப் பொருள், தமிழ்நாடு சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட தோல் பாதுகாப்பு மற்றும் பிரகாசமான பளபளப்பின் இரட்டை நன்மைகளுக்கு உறுதியளிக்கிறது.

 சந்திரிகா ஏழு ஆயுர்வேத மூலிகைகளின் செறிவூட்டும் குணங்களுடன் வேப்பம்பூ மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து அதன் பொருட்களின் பட்டியலை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய சோப்பு கலவையானது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பிரகாசமான, பளபளப்பான சருமம், நுகர்வோரின் தனித்துவம் வாய்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சத்துடன் வருகிறது. 

சந்திரிகாவின் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம் இரட்டை ஆயுர்வேதத்தின் சாராம்சத்தை தெளிவாகப் படம்பிடிக்கிறது கீர்த்தி சுரேஷ் பிராண்ட் தூதுவராக தொலைக்காட்சி விளம்பரத்தில் கொண்டிருப்பது  சிறப்பம்சமாகும், அவர் புதிய சந்திரிகா சோப் எவ்வாறு சருமப் பாதுகாப்பு, பிரகாசமான பளபளப்பு ஆகிய இரண்டையும் வழங்குகிறது என்பதை காண்பிக்கின்றார். படப்பிடிப்பு செட்டில் நிலைமைகள் சவாலாக இருந்தபோதிலும், அவர் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கிறார். சோப்பைப் போலவே, பயனர்கள் தன்னம்பிக்கையுடன் உணர முடியும் என்பதை தொலைக்காட்சி விளம்பரம் நேர்த்தியாக நிரூபிக்கிறது.

விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி எஸ் பிரசன்னா ராய் இந்த மறுதொடக்கம் குறித்து தமது உற்சாகத்தை தெரிவித்தார். அவர் பேசுகையில், “இந்தப் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட சந்திரிகா சோப்பை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நுகர்வோர் தோல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர், இது 'டபுள் ஆயுர்வேத' பேக் மூலம் புதுமைகளை உருவாக்க வழிவகுத்தது. இந்தப் புதிய உருவாக்கம் சந்திரிகாவின் நீண்டகால ஆயுர்வேதக் கொள்கைகளுடன் சரியாகச் சேர்ந்து, பாதுகாப்பு மற்றும் பளபளப்பு ஆகியவற்றின் இரட்டை நன்மைகளை வழங்குகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form