திருச்சிராப்பள்ளியில் எச்டிஎஃப்சி வங்கி பரிவர்த்தன் ஆனது 'முழுமையான ஊரக மேம்பாடு திட்டத்தை' தொடங்கியுள்ளது



இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, அதன் சிஎஸ்ஆர் பிரிவான #பரிவர்த்தன் கீழ், அதன் முதன்மை முயற்சியான ‘'முழுமையான ஊரக மேம்பாடு திட்டத்தை’ தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. 

இம்முயற்சியின் கீழ் ஒருங்கிணைந்த மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 5750 ஏக்கர் விளை நிலங்கள்  மீட்டெடுக்கப்பட்டு அதன் உற்பத்தித்திறனை பெருக்கும். இந்த முன்முயற்சியை செயல்படுத்த அசிஸ்ட் உடன் வங்கி இணைந்துள்ளது. அசிஸ்ட் வாட்டர்-எய்ட் போன்ற குறிப்பிடத்தக்க நிறுவனங்களுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் என்ஜிஒ-களின் நெட்வொர்க்கை வலுப்படுத்துகிறது. 

இத்திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி, மணப்பாறை தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள கொட்டப்பட்டி புதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அசிஸ்ட் இயக்க இயக்குனர், ஜஷ்டி ரங்கா ராவ், அசிஸ்ட் தலைவர், டாக்டர் ரவி வட்லமணி, தலைவர், ஐ.ஏ.எஸ் எம். பிரதீப் குமார் மற்றும் சி.எஸ்.ஆர் ஸ்ரீஜா எம்.ஆர்., ஆகியோர் கலந்து கொண்டனர்.

 எச்ஆர்டிபி முன்முயற்சியானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள 1400 குடும்பங்கள், 7000க்கும் மேற்பட்ட மக்கள் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2027 வரை 3 ஆண்டுகளில் பயன் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது நீர்ப்பாசனத் திறனை அதிகரிப்பது, மண் வள மேலாண்மை, தன்னிறைவு அறிவுதிறன் மேலாண்மை அமைப்பை உருவாக்குதல், சோலார் தெருவிளக்குகள் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அறிமுகப்படுத்துதல் மற்றும் 4 அரசு அங்கன்வாடி மையங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஒருங்கிணைந்த மண் மற்றும் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ள முழுமையான ஊரக வளர்ச்சித் திட்டம் என்பது எச்டிஎஃப்சி வங்கியின் முதன்மையான முயற்சியாகும்.

எச்டிஎஃப்சி வங்கியின் சிஎஸ்ஆர் தலைவர் நுஸ்ரத் பதான் கூறுகையில், “எங்களின் முழுமையான ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கடைநிலை சமூகங்களுக்கு துணைநிற்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எச்டிஎஃப்சி வங்கி உறுதிபூண்டுள்ளது. சமூகத்தின் தேவைகளை நாங்கள் கண்டறிந்து, அவர்கள் நிலையான முறையில் வளரவும் வளம் பெறவும் செய்யும் வகையில் ஆதரவு திட்டங்களை உருவாக்குகிறோம். திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்த 15 கிராமங்களில் உள்ள குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்ள நாங்கள் அசிஸ்ட் உடன் இணைந்து செயல்படுவதில் மனம் மகிழ்கிறோம், மேலும் பயனாளிகளுக்கு பலனளிக்கும் முடிவுகளை வழங்குவதில் அவர்களின் நிபுணத்துவம் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் பரமசிவன், விளக்குகையில், “முழுமையான ஊரக மேம்பாட்டுத் திட்டம் நிலையான வளர்ச்சி மற்றும் சமூக அதிகாரமளிப்புக்கான எச்டிஎஃப்சி வங்கியின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. தரிசு நிலத்தை மீட்டெடுப்பதன் மூலமும், உழவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு நீடித்த நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்”என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form