மூலோபாயங்களின் தொடர்ச்சியாகப் புதிய பொருள்களை அறிமுகப்படுத்தி வரும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது 5 நட்சத்திர வாகனப் பிரிவின் விரிவாக்கமாக குஷாக் ஓனிக்ஸ் ஏடி அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளரின் சமீபத்திய விருப்பத்தின் அடிப்படையில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, குஷாக் ஓனிக்ஸ் விரிவாக்கமாக ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட புத்தம் புதிய அம்சங்களைப் பொருத்திச், சம்மந்தப்பட்ட பிரிவில் அதை அனைவருக்கும் ஏற்ற வாகனமாக வடிவமைத்துள்ளனர். இதன் விலை ₹ 13,49,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜனேபா கூறுகையில் ”புத்தம் புதிய குஷாக் ஓனிக்ஸ் எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை, குறிப்பாக அனைவருக்கும் ஏற்ற விலையில் ஆட்டோமேடிக் வேரியண்ட் தொழில்நுட்பத்தை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் வளர்ச்சி மூலோபாயங்களின் முக்கியப் பகுதியாகும்’ என்றார்.
ஓனிக்ஸ் ஏடி, முந்தைய ஓனிக்ஸ் போலவே, ஸ்கோடாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிக்களான ஆக்டிவ் மற்றும் ஆம்பிஷன் வகைகளுக்கு இடையில் உள்ளது. இதன் வெளிப்புற அம்சங்கள், உயர் ஆம்பிஷன் வேரியண்டிலிருந்து குஷாக்கில் இடம்பெற்றுள்ளன. டிஆர்எல்-களுடன் கூடிய ஸ்கோடா க்ரிஸ்டலின் எல்இடி ஹெட் லேம்புகள், முன் பக்க ஃபாக் விளக்குகள், பின் பக்கம் வைப்பர் மற்றும் டீஃபாகர், பி-பில்லர்களில் டெக்டன் வீல் கவர்கள், ஓனிக்ஸ் பேட்ஜிங், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், குரோம் ஸ்கோலர், 2-ஸ்போக், மல்டி ஃபங்க்ஷன், லெதர் ஸ்டீயரிங்க் வீல், கேபினில் டச் பேனலுடன் ஸ்கோடாவின் க்ளைமேட்ரோனிக், முன்புறமுள்ள ஸ்க்ரஃப் தகடுகளில் ‘ஓனிக்ஸ்’ பெயர், நிலையான ஆறு ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்களுடன் வருகின்றன.
ஸ்கோடா ஆட்டோவின் நிரூபிக்கப்பட்ட 1.0 டிஎஸ்ஐ டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் ஓனிக்ஸ் ஏடி இயங்குகிறது. 85 கிவா (115 பிஎஸ்) சக்தியையும், 178 என்எம் டார்க்கையும் உருவாக்கி சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கிறது. குளோபல் நியூ கார் அசெஸ்மெண்ட் புரோக்கிராம் க்ராஷ் திட்டத்தின் கீழ், 2022 அக்டோபரில், புதிய மற்றும் கடுமையான நெறிமுறைகளின் கீழ் குஷாக் பரிசோதிக்கப்பட்டது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 29.64 புள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 42 புள்ளிகளையும் இந்த எஸ்யூவி பெற்றுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முழு ஐந்து நட்சத்திர தர மதிப்பெண்களைப் பெற்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார் குஷாக் ஆகும்.