ரூ. 24,690க்கு அறிமுகமாகும் ஹேயர் குளிர்சாதனம்

  ஹேயர் அப்ளையன்சன்ஸ் இந்தியா,   அதன் கிராபைட் தோற்றத்திலான குளிர்சாதன தொடரை வெளியிட்டது. இந்த ரகத்திலான குளிர்சாதன பெட்டிகள் 205 முதல் 602 லிட்டர்கள் வரையிலான திறன்களில் கிடைக்கும். ப்ரீமியம், நவீன வடிவமைப்பு மற்றும் வைபை இயக்கப்பட்ட ஸ்மார்ட்ராக குளிர்சாதன பெட்டி சமீபத்திய ஆண்டுகளில், இந்திய நுகர்வோர்கள் தங்கள் வீடுகளின் அழகியலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.  

இந்த ரகத்திலான குளிர்சாதன பெட்டிகள், டைரக்ட் கூல், டாப் மவுன்டட், பாட்டம் மவுன்டட், டோர் சைட் பை சைட், மற்றும் 3 டோர் சைடு பை சைடு உள்ளிட்ட வெவ்வேறு விதமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராபைட் ரக ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சில்லறை வணிகங்களில் 24, 690 ரூபாய் என்று ஆரம்ப விலையில் கிடைக்கும். சைட் பை சைட் வரம்பு 1 லட்சத்து 13 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். ஹேயர் இந்தியா அனைத்து மாடல்களுக்கும் இரண்டு வருட தயாரிப்பு உத்தரவாதத்தையும், பத்து வருட கம்பரசர் உத்தரவாதத்தையும் வழங்குகிறது.

 ஹேயர் ஆனது அதன் புரட்சிகர 3 டோர் வை-ஃபை கன்வர்ட்பில் சைட் பை சைட் குளிர்சாதன பெட்டிகள் வரம்பில் மேட்பினிஷ் சீரியஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களுக்கு ஹைஸ்மார்ட் செயலியை பயன்படுத்தி ஃப்ரீசர் பகுதியை ஃப்ரிட்ஜில் மாற்றுவதற்கு உண்டான வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிராபைட் தொடரில் வைஃபை இயக்கப்பட்ட ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டிகளும் உள்ளன, இந்த ரக குளிர்சாதன பெட்டிகளை எங்கிருந்தும் இணைக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்.

புதிய குளிர்சாதன பெட்டிகள் அனைத்து மாடல்களிலும் கிடைக்கும். விரைவான குளிர்ச்சி மற்றும் உரை பணியை வழங்க டர்போ ஐசிங், குறைந்த ஒலியளவை ஏற்படுத்தி அதிக ஆற்றல் சேமிப்பை அளிக்கும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் , காற்றோட்டத்தை அனுமதிக்கும் இரட்டை மின்விசிறி தொழில்நுட்பம், வெப்பநிலை முறைகளை மாற்றி அமைக்கும் ஸ்மார்ட் டிஸ்ப்ளே, கனெக்ட் ஹோம் இன்வெர்டர் தொழில்நுட்பம், ஸ்டெபிலைசர் இல்லாத செயல்பாடு, 360 டிகிரி குளிர்ச்சியை வழங்க டுயோ ஃப்ரஷ் தொழில்நுட்பம் என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஹேயர் அப்ளையன்ஸ் இந்தியாவின் தலைவர் என் எஸ் சதீஷ், ”எங்கள் அறிமுகத்தின் ஒன்றான இந்த கிராபைட் ரக குளிர்சாதன பெட்டிகளின் வெளியீடு, பிரீமியம் புதுமை மற்றும் வடிவமைப்பின் சரியான கலவையை வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்றவாறு எங்களின் புதிய வரம்பு ப்ரீமியம் அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form