சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களில் லீட் 80% வளர்ச்சியைக் காண்கிறதுஇந்தியாவின் முன்னணி ஸ்கூல் எட்டெக் நிறுவனமான லீட் இன் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் 2024 ஆம் ஆண்டு பேட்ச்,  சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகளில் குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு 90 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 161 லீட்மாணவர்கள் 90%க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். விரிவான பாடத் திட்டங்கள், ஆசிரியர்களுக்கான ஆதாரங்கள், பயிற்சித் தேர்வுகள் மற்றும் மாணவர்களுக்கான மாதிரித் தேர்வுகள் ஆகியவற்றுடன் போர்டு தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கான ஒரு முழுமையான அமைப்பை லீட், பள்ளிகளுக்கு வழங்குகிறது. கூடுதலாக, லீட் செயலியானது, மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வுக்கு தயாராவதில் மேலும் உதவுகின்ற வரம்பற்ற பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது.

ஒரு குறிப்பிடத்தக்க சாதனையில், அயோத்தியாப்பட்டினத்தில் உள்ள தங்கம் மவுண்ட் லிடெரா ஜீ பள்ளியைச் சேர்ந்த R A விஷால், N வித்யுத் மற்றும் M S ராகவ் சாய்நாத் ஆகியோர் முறையே 98%, 97% மற்றும் 95.6% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். பல லீட் மாணவர்கள் கணிதம், சமூக அறிவியல் மற்றும் இசை போன்ற பாடங்களில் ஒரு முழுமையான 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

லீட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் சுமீத் மேத்தா கூறுகையில், "சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு போர்டு தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட 2024 லீட் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர்களின் குறிப்பிடத்தக்க கல்வி சாதனையானது, ஒவ்வொரு மாணவரும், அவர்களுடைய பின்னணி அல்லது இருப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சரியான பள்ளி பயிற்றுவிப்பு மூலம் சிறந்து விளங்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளார் என்ற எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. லீட் குழுமத்தில், எங்கள் மாணவர்களின் வெற்றிகளில் நாங்கள் அளவற்ற பெருமிதம் கொள்கிறோம் மற்றும் ஒரு நேரத்தில் ஒரு பள்ளி என்ற முழுமையான கல்வி மாற்றத்தைக் கொண்டுவருவதில் நாங்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்" என்றார்.

அயோத்தியாப்பட்டினத்தில் உள்ள தங்கம் மவுண்ட் லிட்டரா ஜீ பள்ளி மாணவர் R A விஷால், “சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நான் சிறப்பாக செயல்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோருக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் , அவர்களுடைய அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது. இந்த லீட் பாடத்திட்டமும் கற்பித்தல்-கற்றல் செயல்முறையும் எல்லா பாடங்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது, மேலும் இந்தக் கருத்தியல் புரிதலை எனது வாரியத் தேர்வுகளில் திறம்படப் பயன்படுத்த உதவியது "என்றார்.

அயோத்தியாப்பட்டினம் தங்கம் மவுண்ட் லிட்டேரா ஜீ பள்ளியின் முதல்வர் திருமதி நித்யா கூறுகையில், “சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்ட R A விஷால், N வித்யுத் மற்றும் M S ராகவ் ஆகியோரைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் ஈர்க்கக்கூடிய முடிவுகள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு, அத்துடன் லீட் வழங்கிய விரிவான கல்வி ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை பிரதிபலிக்கின்றன. லீட் இன் கடுமையான 10 ஆம் வகுப்பு திட்டமானது, முழுமையான பயிற்சி மற்றும் சரியானநேரத் தீர்வுகள் ஆகியவற்றில் அதன் முக்கியத்துவம் மூலம் பாடங்களில் மாணவர்களின் கருத்தியல் புரிதலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது மற்றும் அவர்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்க உதவியது."என்றார்


Post a Comment

Previous Post Next Post

Contact Form