ரேஞ்ச் ரோவர் ஹவுஸ் இந்தியர்களின் ஆடம்பரமான கடலோர நகரமான அலிபாக் நகரில் அறிமுகமாகிறது. இது தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் வாகனங்களில் சிலவற்றை இங்கு காட்சிப்படுத்தப்படும் பிரத்தியேக இந்திய சந்தையாகும். ரேஞ்ச் ரோவர் இன் ஆடம்பரமாக நியமிக்கப்பட்ட பெரிய எஸ்யுவி-க்கு பிறகு வாகனங்களுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர் தேவை அதிகரித்து வருவதால், நேர்த்தியான ரேஞ்ச் ரோவர் மற்றும் டைனமிக், நவீன செயல் திறன் கொண்ட எஸ்யுவி ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகிய இரண்டும் முதல் முறையாக இந்தியாவின் புனேவில் தயாரிக்கப்படும்.
இந்த திட்டங்கள், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரேஞ்ச் ரோவர் இன் பினாக்கில் வாகனங்களுக்கான குறுகிய காத்திருப்பு நேரங்களில் இருந்து பயனடைய உதவுவதோடு மட்டுமல்லாமல், மேலும் நவீன சொகுசு ரக வாடிக்கையாளர் பயணத்தை வழங்கும் ஜேஎல்ஆர்-இன் திறனை விரிவு படுத்துகிறது. ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் முதல் நாடு இந்தியாவாகும். இது ரேஞ்ச் ரோவர் வெலர், ரேஞ்ச் ரோவர் யேவோக், ஜாகுவார் எப் ஃபேஸ் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவற்றுடன் புதிய தயாரிப்புகளை தொடங்கியுள்ளது.
ரேஞ்ச் ரோவர் மிகவும் விரும்பத்தக்க சொகுசு எஸ்யுவி வாகனங்கள், அமைதியான ஆறுதல் மற்றும் அமைதியுடன் அனைத்தையும் வெற்றி கொள்ளும் திறனுடன் இணைக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் தற்போது 3.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோ பயோகிராபில் கிடைக்கிறது மற்றும் இதன் டெலிவரி மே 24 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்ட டீசல் எச்எஸ்இ எல்டபிள்யுபி விலை 2 கோடியே 36 லட்சம் ரூபாய் ஆகும். இதேபோல் ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோ பயோகிராபி எல்டபிள்யுபி விலை இரண்டு கோடியே 60 லட்சம் ரூபாயாகும்.
ரேஞ்ச் ரோவர் மேம்பட்ட தொழில்நுட்பத்தை நவீன ஆடம்பரத்துடன் இணைத்து ஒவ்வொரு பயணிக்கும் ஒப்பற்ற திறன்களை வழங்குகிறது. எம்எல்ஏ - பிளக்ஸ் பாடி ஆர்க்கிடெக்சர் மூலம் அமைதியான கேபின் அமைதி, 1600 வாட் மெரிடியன் சிக்னேச்சர் சவுண்ட் சிஸ்டத்தை பயன்படுத்தி, சாலையில் செல்லும் பொழுது அமைதியான பயண அனுபவம், மூன்றாவது தலைமுறை ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேசன் சிஸ்டம், 35 ஸ்பீக்கர்கள், நான்கு முக்கிய கேபின்களுக்கும் ஒவ்வொரு ஹெட் ரெஸ்ட்களிலும் அறுபது மில்லி மீட்டர் வட்டம் கொண்ட ஒரு இணை ஒலிபெருக்கி, கேபின் ஏர் பியூரிகேஷன் ப்ரோ, காற்றின் தரத்தை மேம்படுத்தும் சிஓ2 மேலாண்மை மற்றும் பிஎம் 2.5 கேபின் காற்று வடிகட்டுதல், சிரமம் இல்லாத வாகன இயக்கம் வசதியான ஆல்வில் ஸ்டியரிங் மற்றும் தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் ஏர் ஸ்பிரிங்ஸ் வால்யூங்களை ட்வின் வல்வ் டம்ர்கள் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. இது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அடாப்டிவ் டைனமிக்ஸ் கட்டுப்பாடு மென்பொருளால் நிர்வகிக்கப்படுகிறது. விருது பெற்ற பி வி ப்ரோ இன்ஃபோடைன்மென்ட் தொழில்நுட்பம் அதன் மிகப்பெரிய தொடுத்தரையுடன் 33.27 சென்டி மீட்டர் வடிவமைப்புடன் வருகிறது.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆனது ரேஞ்ச் ரோவர் சுத்திகரிப்பு வர்த்தக முத்திரையுடன் கூடிய ஸ்போர்ட் ஆடம்பர மற்றும் சிரமற்ற ஆன்ரோடு செயல் திறன் உடன் வருகிறது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் தற்போது 3.0 லிட்டர் பெட்ரோல் டைனமிக் எஸ்இ- இல் கிடைக்கிறது. இதன் டெலிவரி ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்குகிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 3.0 லிட்டர் பெட்ரோல் டைனமிக் எஸ்இ மற்றும் 3.0 லிட்டர் டீசல் டைனமிக் எஸ்இ விலை ஒரு கோடியே 40 லட்சம் ஆகும்.
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் அதிநவீன எம்எல்ஏ பிளக்ஸ் பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிலைத் திறன், செயல் திறன் மற்றும் கையாளுதல், அதிக திறன் ஆகியவற்றை செயல்படுத்துகிறது. டைனமிக் ஏர் சஸ்பென்ஷன், ஃப்ரீ எம்ப்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் அடாப்டிவ் ஆபரேட் குரூஸ் கண்ட்ரோல் போன்ற கூறுகள் ஒட்டுமொத்தமாக ஆல்ரவுண்ட் திறனை அதிகரிக்கின்றன. புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்டின் உட்புறம் நவீனமானது. புதிய டிஜிட்டல் எல்இடி ஹெட் லைட்டுகள் அடாப்ட்யூப் ஃபிரண்ட் லைட்டிங் மூலம் உயர் செயல்திறன் தெரிவுநிலை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. விருது பெற்ற டிவி ப்ரோ இன்ஃபோ டைமண்ட் நவீனத்துவ டேஷ் போர்டின் மையத்தில் நிலை நிறுத்தப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட 33.27 சென்டி மீட்டர் (13.1) ஆப்டிக் தொடுத்தரையை கொண்டுள்ளது. கேபின் ஏர் பியூரிஃபிகேஷன் ப்ரோ சரியான ஓட்டுநர் சூழலை உருவாக்கவும் பராமரிக்கவும் வழிவகை செய்கிறது.
ஜேஎல்ஆர் ஆலையின் தலைமை வணிக அதிகாரி லென்னர்ட் ஹூர்னிக் கூறுகையில், ”இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் உடன் உள்ளூர் உற்பத்தியானது, நாட்டில் மிகவும் விரும்பத்தக்க நவீன சொகுசு ரக எஸ்யுவி கார்களை உருவாக்கும் குழுமமாக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கான அடுத்த கட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்த சந்தையில் வாடிக்கையாளர்களுக்கான ரேஞ்ச் ரோவர் ரக கார்கள், இனி "மேட் இன் இந்தியா" ஆக இருக்கும். அதே வேளையில், அதன் முன்மாதிரியான பிரிட்டிஷ் வடிவமைப்பின் தனித்துவமானதாக உள்ளதோடு மட்டுமல்லாமல், ரேஞ்ச் ரோவர் பிராண்டுக்கு ஏற்றதாக இருக்கும் அழகியல் தொழில்நுட்பத்தையும் வரையறுத்திறுக்கும்” என்றார்.
ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெரால்டின் இங்கம் கூறுகையில், உலகம் முழுவதும் எங்கள் 53 ஆண்டுகால வரலாற்றில், ரேஞ்ச் ரோவர் நிறுவனத்துக்கான வாடிக்கையாளர் தேவையின் மிக உயர்ந்த அளவை தற்போது உருவாக்கி இருப்பதாக கூறினார். இது ஒரு முன்னோடி இல்லாத வெற்றி கதை மட்டுமின்றி இந்தியா அதில் மிக முக்கியமான பகுதியாகும் என்றார். 24ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் சில்லறை விற்பனை 160 விழுக்காடு உயர்ந்து உள்ளது என்றும், இது மேலும் ரேஞ்சரோ வரை உள்நாட்டில் தயாரிப்பது, நாடு முழுவதும் உள்ள விவேகமான வாடிக்கையாளர்கள் மற்றும் புகழ் பெற்ற நபர்களிடையே வளர்ந்து வரும் இந்த தேவைக்கு பதிலளிக்க உதவும் என்றார்.
இந்தியாவின் ஜேஎல்ஆர் ஆலையின் நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா கூறுகையில், " இந்தியாவில் உள்ள நம் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம். உள்நாட்டில் தயாரிக்கும் ரேஞ்ச்ரோவரை உற்பத்தி செய்யும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவில் நாம் பெற்றுள்ளோம். ரேஞ்ச் ரோவர் புல்மத்தை உள்நாட்டில் தயாரிப்பது, சிறந்த பிரிட்டிஷ் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை "மேட் இன் இந்தியா" சொகுசு வாகனத்தை வைத்திருப்பதன் பெருமையை சந்திக்கும்” என்றார்.