வரும் ஆண்டில் இந்தியாவின் நிதிச் சந்தைகளுக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய பொருளாதார சூழல் மற்றும் முக்கிய முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவான தகவல்களை வழங்கும் ‘சந்தை கண்ணோட்டம் 2026’ அறிக்கையை கோடக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது.
இந்த அறிக்கை பங்குகள், நிலையான வருமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள வாய்ப்புகளை தெரிவிக்கும் அதேவேளையில் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய உலகளாவிய மற்றும் உள்நாட்டு போக்குகள் குறித்தும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோடக் மஹிந்திரா ஏஎம்சி நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறுகையில், 2026-ம் நிதியாண்டில் வருவாய் வளர்ச்சியில் ஈக்விட்டி வருமானம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இந்திய கார்ப்பரேட் துறை 2027-ம் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வதோடு பங்கு சந்தை பணப்புழக்கமும் அதிகரிக்கும். நடுத்தர முதலீட்டு நிறுவனங்கள் பெரிய மற்றும் சிறிய முதலீட்டு நிறுவனங்களை விட சிறப்பாக செயல்படத் தயாராக உள்ளன. மத்திய வங்கி தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கி வருவதால் அதன் விலைகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும். முதலீட்டாளர்கள் நிலையான வருமானம், வளர்ந்து வரும் சந்தை போக்கிற்கு ஏற்ப சொத்து வகைகளில் சமநிலையான, பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பின்பற்றினால் சிறந்த பலனைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.
2026-ம் ஆண்டின் சிறப்பு அம்சங்களாக நிதி சேவைகள் - வளர்ச்சி மற்றும் லாபத்தை மேம்படுத்துதல், நுகர்வு மேல்சுழற்சி - வளர்சியை அடைதல், மின்னணு வணிகம் - டிஜிட்டல் வளர்ச்சி, சுகாதார வாய்ப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, நிலையான வருமானம் நிலைத்தன்மையைச் சேர்ப்பதன் மூலமும் ஆபத்தை நிர்வகிக்க உதவும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ப்ளூம்பெர்க் உலகளாவிய மொத்த குறியீட்டில் இந்தியா நுழைவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு ஜனவரி மாதம் வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 25 பில்லியன் டாலர்கள் வரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நிலையான பணவீக்கம் மற்றும் ஆதரவான நிதி மற்றும் பணவியல் கொள்கைகள் பங்கு முதலீட்டு சந்தையில் ஒரு ஆக்கபூர்வ வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தைத் தொடர்ந்து வழங்குகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.