இந்தியாவின் முன்னணி பிஸ்கட் பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ், அதன் நியூட்ரிப்ளஸ் செயலியின் வாயிலாக சுகாதார-தொழில்நுட்பத் துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது. பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸின் இந்த ‘நியூட்ரிப்ளஸ் செயலியை ஆக்டிவோ லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது. ஆக்டிவோ லேப்ஸின் தொழில்நுட்பமானது ஒருவரது உடல்நலனை வெளிப்படுத்தும் அளவீடுகளை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது.
ஆக்டிவோ லேப்ஸ் நிறுவனத்தின் உயரிய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் குழுவால் உருவாக்கப்பட்ட, “ நியூட்ரிப்ளஸ் செயலியானது தினசரி எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், எவ்வளவு நேரம் உறங்குகிறார்கள் என்பன போன்ற காரணிகளின் அடிப்படையில் செயலியை பயன்படுத்துவோருக்கு ஒரு மதிப்பெண்ணை வழங்கும். இதன் மூலம் அவர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெறலாம். நியூட்ரிப்ளஸ் செயலியானது ஒரு விரிவான வாராந்திர உடல்நல மதிப்பீட்டையும் வழங்குகிறது. பயன்பாட்டாளரின் பிராந்தியம் உள்ளிட்ட இதர அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல், பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நுண்ணறிவுகளுடன் இந்த மதிப்பீடு அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த செயலியின் அறிமுகம் குறித்து பேசிய பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அலுவலர், அமித் தோஷி, "இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளை சென்றடையும் பலவகையான பிரிட்டானியா நியூட்ரிசாய்ஸ் பேக்கேஜில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், நுகர்வோர் நியூட்ரிப்ளஸ் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். நலமான வாழ்வு மற்றும் சிறந்த வாழ்வியல் முறைகளைத் நாடும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் உற்ற பார்ட்னராக நியூட்ரிசாய்ஸ் இருக்க வேண்டும் என்கிற முன்முயற்சியில் ஒரு படியாக இந்த நியூட்ரிப்ளஸ் செயலி இருக்கும்” என்றார்.