பயோ மதுபான வகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது வெற்றியை பயோ இந்தியா நிறுவனம் கொண்டாடுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயோ விஸ்கி, டூடே ஸ்பெஷல் கோல்ட் பயோ விஸ்கி, டெய்லி ஸ்பெஷல் பிராந்தி, வைல்ட் பாக்ஸ் விஸ்கி மற்றும் என்-சைன் பயோ பிராந்தி ஆகிய பயோ மதுபான வகைகளின் பிரீமியம் வரம்பை பயோ இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்தியாவில் தெலுங்கானா, ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் ஒயின் அண்ட் ஸ்பிரிட்ஸ் மொத்த விற்பனையாளர் ஸ்பிரிட்ஸ் சுவைப் போட்டியின் 75வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சியில் பயோ மதுபானங்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஸ்பிரிட்ஸ் மொத்த விற்பனையாளர்கள் நடத்திய மதுபான சுவைப் போட்டியில் கடந்த 2018-ல் வெற்றியாளராக பயோ இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பயோ மதுபானங்களை கண்டுபிடித்த டாக்டர் ஸ்ரீனிவாஸ் அமர்நாத் இது குறித்து கூறுகையில், ”எனது குடும்பத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக தூண்டப்பட்டு இந்த குடிப்பழக்கத்திற்கு மாற்றாக ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தான் இந்த பயோ மதுபானத்தை தயாரித்தேன். பயோ மதுபானங்கள் பயோ ஆல்கலாய்டுகளால் செறிவூட்டப்பட்டவை ஆகும். இதில் செயற்கை சுவைகள் மற்றும் வண்ணங்கள் எதுவும் இல்லை. இவற்றில் இயற்கை நறுமணங்கள், ஆனால் பாரம்பரிய மதுபான பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில் அவற்றுக்கு நிகராக இவை உள்ளன. ஆயுர்வேதம் மற்றும் தாவர அடிப்படையிலான நானோ தொழில்நுட்பத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கிடைத்த அனுபவத்தின் மூலம், நான் இவற்றை தயாரித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய பயோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாச ராயலு கூறுகையில், ”சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த மதுபான சுவைப் போட்டியில் எங்கள் நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் இது தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் கணிசமான முதலீடுகளைச் செய்தல், உலகளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் மாதிரி சோதனை ஆகியவற்றிற்காக சுமார் 7 மில்லியன் டாலர் செலவாகும். நுகர்வோர் விருப்பங்களை பூர்த்தி செய்ய ஆயிரக்கணக்கான கலவைகளை நாங்கள் உன்னிப்பாக இந்த மதுபானங்களில் நாங்கள் சேர்த்துள்ளோம். இதை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எங்கள் பிராண்டுகள் உலகளவில் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிற முக்கிய சந்தைகளில் வரவேற்பைப் பெறும்” என்றார்.