ஷவர் போர்ட்ஃபோலியோவை மேம்படுத்தும் யார்ட்லி லண்டன்

 


இந்தியாவில் பிரீமியம் ஃபிராக்ரன்ஸ் மற்றும் பெர்சனல் வாஷ் பிராண்டுகளில் ஒன்றான விப்ரோவின் யார்ட்லி லண்டன், ஷவர் ஜெல்ஸ் மற்றும் கிளியர் ஜெல் பார்களின் புத்தம் புதிய வரிசையை தமது ஷவர் அத்தியாவசியப் போர்ட்ஃபோலியோவில் அறிமுகப்படுத்துவதில் உற்சாகமாக உள்ளது. இந்தப் புராடக்டுகள் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது. ஷவர் ஜெல்ஸ் தோல் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு, பிஎச் சமநிலையில் உள்ளது. மேலும் கிளியர் ஜெல் பார்கள் 99 சதவிதம் தூய கிளிசரின் மூலம் உட்செலுத்தப்படுகின்றன. சிலிகான்கள் மற்றும் பாரபென்கள் இல்லாமல், அவை மென்மையான மற்றும் பயனுள்ள சுத்தப்படுத்தும் அனுபவத்தை வழங்குகின்றன.

ஐரிஸ் அண்ட் வயலட் , கார்டெனியா அண்ட் வாட்டர்லில்லி, பியோனி அண்ட் ய்லாங் ய்லாங் மற்றும் லில்லி ஆஃப் வேலி அண்ட் ஃபிராங்கிபானி  உள்ளிட்ட மென்மையான வாசனையுள்ள வகைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். யார்ட்லி கிளியர் ஜெல் பார் மற்றும் ஷவர் ஜெல் வகை இப்போது கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளிலும் யார்ட்லியின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற முக்கிய ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது. கிளியர் ஜெல் பார் 125 கிராம் விலை ரூ. 95 மற்றும் ஷவர் ஜெல் 250 மிலி விலை ரூ. 225க்கு கிடைக்கும்.

யார்ட்லி இந்தியா மற்றும் தாய்லாந்தின் மூத்த துணைத் தலைவரும் வணிகத் தலைவருமான மணீஷ் வியாஸ் கூறுகையில், “யார்ட்லி குடும்பத்தில் சமீபத்திய சேர்ப்புகளான புதிய யார்ட்லி ஷவர் ஜெல்ஸ் மற்றும் கிளியர் ஜெல் பார்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்துகிறோம்.  எங்கள் சமீபத்திய சேர்ப்புகள் இயற்கையான மலர் எண்ணெய்களால் உட்செலுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் எங்கள் பிராண்ட் சலுகைகளை மேம்படுத்துவதற்கும், எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form