விரைவான மாற்றங்களுடன் தொடர்ந்து உருவாகி வரும் டிஜிட்டல் சூழலில், யூடியூப் தளத்தில் கல்வி வீடியோக்களை வழங்கும் முன்னணிச் சேனலாக இன்ஃபோபெல்ஸ் உள்ளது. கலாச்சாரம், புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன், இன்ஃபோபெல்ஸ் தொடர்ந்து செயலாற்றி வருவதோடு மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மாணவச் செல்வங்களையும் சென்றடைகிறது. யூடியூப்பின் தளத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் பரந்த உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து இன்ஃபோபெல்ஸ் பயனடைந்துள்ளது.
தனது பல்வேறு பிராந்திய சேனல்களில் 170 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை வைத்திருப்பதன் மூலம் இன்ஃபோபெல்ஸ் ஒரு மகத்தான பார்வையாளர் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இன்ஃபோபெல்ஸ்-ஹிந்தி (58 மில்லியன் சந்தாதாரர்கள்), இன்ஃபோபெல்ஸ்-தமிழ் (30 மில்லியன்) மற்றும் பிற சேனல்கள் இணைந்து கூட்டாக 1 பில்லியன் மாதாந்திர பார்வைகளைப் பெறுகின்றன.
இந்தியா பல்வேறு மொழியியல் நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால், இன்ஃபோபெல்ஸ் தனது வீடியோக்களைப் பல்வேறு பிராந்திய மொழிகளில் புத்திசாலித்தனமாக உருவாக்கியுள்ளது. இந்த பன்மொழி அணுகுமுறை அவர்களின் வரம்பை விரிவுபடுத்துவதோடும் ஆழமான கலாச்சார மட்டத்தில் பார்வையாளர்களுடன் இணைய அவர்களுக்கு உதவுகிறது. இன்ஃபோபெல்ஸ் கையாளும் உத்தி பார்வைகளைப் பெறுவதோடு மட்டும் முடிந்துவிடுவது இல்லை. அவற்றின் வீடியோக்கள் பார்வையாளர்கள் ஈடுபடத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கற்றலை இருவழிச் செயல்முறையாக மாற்றுகிறது.
யூடியூப் தளத்தில் இன்ஃபோபெல்ஸின் வெற்றிக்கான திறவுகோல் அது அதன் வீடியோக்களில் கையாளும் உத்தியைப் பொறுத்தது. இன்ஃபோபெல்ஸ் ஆனது நர்சரி ரைம்கள், கதைகள், பாடல்கள் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்கள் ஆகியவற்றின் கலவையை வழங்குகிறது. வீடியோக்களில் சொல்லப்படும் கதைகள் மற்றும் செயல்பாடுகளுக்குள் குழந்தைகள் வெவ்வேறு சூழ்நிலைகளையும் விளைவுகளையும் வழிசெலுத்த கற்றுக்கொள்வதால், இந்த வகையான விளையாட்டுகள் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவுகின்றன.
கற்பனையான விளையாட்டுகளைக் காட்சிப்படுத்துவதன் மூலம், இன்ஃபோபெல்ஸின் வீடியோக்கள் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்தவும் மற்ற உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கின்றன. யூடியூபின் பணமாக்குதல் மாடல் மூலம் இன்ஃபோபெல்ஸ் நிலையான வருவாய் ஸ்ட்ரீமில் நுழைந்துள்ளது. இந்த நிதி நிலைத்தன்மை அவர்களை தரமான வீடியோ உருவாக்கத்தில் முதலீடு செய்யவும் புதிய வளர்ச்சி வழிகளை ஆராயவும் ஊக்குவிக்கின்றது. தங்களின் வருவாய் செயல்முறைகளின் பல்வகைப்படுத்தலை அதிகரிக்கவும், தங்களின் பிராண்ட் அங்கீகாரத்தை வலுப்படுத்தவும், மொபைல் பயன்பாடு மற்றும் பிராண்ட் உரிம சந்தைகளில் இன்ஃபோபெல்ஸ் நுழைய விரும்புகிறது.
இன்ஃபோபெல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெயலக்ஷ்மி குபேர் கூறுகையில், “எங்கள் நோக்கம் வீடியோக்களை உருவாக்குவது மட்டுமல்ல. கல்விதான் நமது எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். இன்ஃபோபெல்ஸில், இந்த அடித்தளத்தை முடிந்தவரை வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் அமைக்க முயற்சிக்கின்றோம். இது தொடர்ந்து வளர்ந்து வரும் உலகை ,மாணவர் களுக்கு கற்கும் ஆர்வத்துடனும் , நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள உதவுகிறது” என்றார்.
இன்ஃபோபெல்ஸின் நிர்வாகக் கூட்டாளர் குபேர் நடராஜன் பேசுகையில், “இந்தியாவின் பல்வேறு மொழிகளை அங்கீகரித்து, பல்வேறு பிராந்திய பேச்சு வழக்குகளில் வீடியோக்களை இன்ஃபோபெல்ஸ் உருவாக்குகிறது. இந்த அணுகுமுறை எங்கள் பார்வையாளர்களுடன் எங்களை ஆழமாக இணைக்கிறது. எங்களின் ஊடாடும் வீடியோக்கள் ஈடுபாட்டுடன் கூடிய கற்றலை வழங்குகின்றன. இது நம்பகமான யூடியூப் சமூகத்தை உருவாக்குகிறது மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது” என்றார்.
யூடியூபில் இன்ஃபோபெல்ஸின் பயணம், கல்வி வீடியோக்களை எவ்வாறு ஈடுபாட்டுடன் கூடியதாகவும், கலாச்சார ரீதியாகப் பொருத்தமானதாகவும் மற்றும் பரவலாக அணுகக்கூடியதாகவும் மாற்றலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.தொடர்ந்து விரிவடைந்து வளர்ச்சியடையும் போது, யூடியூப் போன்ற தளங்களில் டிஜிட்டல் கல்வி வழங்குவதில் மேம்பட விரும்பும் மற்றவர்களுக்கு இன்ஃபோபெல்ஸ் ஒரு முன்மாதிரியாக உள்ளது.