பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய, $2.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிகே பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமான ஓரியண்ட் எலக்ட்ரீக் லிமிடெட் நிறுவனம் - சமீபத்தில் டிஇஇ அறக்கட்டளையுடன் இணைந்து, கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வின் மீது அந்நிறுவனத்திற்கு உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக மின் பணியாளர்களுக்கு, எலக்ட்ரீஷியன்களுக்கு விரிவான முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்காக 'உஜ்வல்' என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 நிதியாண்டில் நாடு முழுவதும் 5000 எலக்ட்ரீஷியன்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்த என்எஸ்டிசி - சான்றளிக்கப்பட்ட இத்திட்டதின் நோக்கமாகும்., சமூகங்களை மேம்படுத்துவதிலும், தொழில்துறையில் நிரப்பப்பட வேண்டிய திறன் இடைவெளியைக் குறைப்பதிலும் ஓரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எட்டுத்துக்காட்டும் விதமாக இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பயலரங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் நிகழவுள்ளதால் பல்வேறு பின்புலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன்கள் இந்த முன்முயற்சியினால் பயனடைவார்கள் என்பதை உறுதியாக கூறலாம். ஒவ்வொரு பயிலரங்கையும், சான்றளிக்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் வழிநடத்துவார்கள் - மின்துறை சார்ந்த வர்த்தகம், தனிநபர் திறன்கள், டிஜிட்டல் மற்றும் நிதி கல்வியறிவு போன்ற முக்கியமான பிரிவுகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். எலக்ட்ரீஷியன்களை விரிவான திறன்களுடன் தயார்படுத்துவதன் மூலம், அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, நீண்டகால வெற்றிக்குத் தேவையான செயலாற்றலை வழங்குவதை இந்த சிஎஸ்ஆர்திட்டம் அதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு எலக்ட்ரீஷியன்கள் 'ஸ்கில் இந்தியா'-வின் சான்றிதழைப் பெறலாம்.
ஓரியண்ட் எலக்ட்ரீக் லிமிடெட் நிறுவனத்தின் வைஸ் சேர்மன் அண்ட் நிர்வாக இயக்குனர் தீபக் கேத்ரபால் கூறுகையில், “ எங்களது சிஎஸ்ஆர் முன்முயற்சியான ‘உஜ்வல்’ திட்டம் மூலம் மின் பணியாளர் சமூகங்களுக்கு செயலாற்றலை அளிக்க வேண்டும் என்கிற எங்களது நிலைப்பாட்டிற்கு மேலும் வலு சேர்த்துள்ளோம். இத்திட்டம், எங்களது நிறுவனத்தின் நன்மதிப்புகளுடன் ஒத்துப்போவதாக மட்டுமில்லாமல், இத்தொழில்துறையில் உள்ள திறன் இடைவெளியை நிரப்ப வேண்டும் என்கிற பெரிய இலக்கிற்கும் பங்களிக்கிறது. இத்திட்டத்தின் மூலம், எலக்ட்ரீஷியன்களுக்கு ஒரு பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம்” என்றார்.