மகளிர் தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் பிரிட்டானியா






இந்தியாவின் முன்னணி பிஸ்கட் பிராண்டுகளில் ஒன்றான பிரிட்டானியா மேரி கோல்ட் இன்று மகளிர் தொழில்முனைவோருக்கான ஒரு தனித்துவமான முழு டிஜிட்டல் செயலமைப்பான ஹெர்ஸ்டோரை  அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில்  உள்ள அனைத்து பெண் தொழில்முனைவோருக்கும் அவர்களின் பயணத்தில் நிலையான ஆதரவைப் வழங்குவதற்கான ஒரு தளத்தை வழங்கும் வகையில் ஹெர் ஸ்டோர் https://www.her.store வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில்முனைவோர் ஒன்றாக நின்று, ஒற்றுமையாய் முன்னேற்ற ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ள ஆதரவளிக்கும் ஒரு முழு டிஜிட்டல் செயலமைப்பை ஏற்படுத்துவதில் பிரிட்டானியா பிராண்ட் கொண்டுள்ள அர்ப்பணிப்பினை - "சாத் ஜூடோ, சாத் உடோ" (ஒன்றாக நின்று, ஒற்றுமையாய் முன்னேறுவோம்) என்ற டேக்லைனின் மூலம்  வெளிப்படுத்துகிறது; இந்த முன்னெடுப்பின் மூலம் மகளிர் அதிகம் செயல்படவும், பெரிதளவில் சாதிக்கவும் முடியும்.

பிரிட்டானியா மேரி கோல்ட் நிறுவனத்தால் வழிநடத்தப்படும் ஹெர்ஸ்டோர் மூலம் பெண்களை உரிமையாளர்களாக கொண்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பட்டியலிடும் ஒரு தனித்துவமான சந்தையை அறிமுகப்படுத்தி, பெண்களுக்கான அதன் அர்ப்பணிப்பை நோக்கிய இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த சந்தை நிலப்பரப்பில் சிறந்த முறையில் முன்னேறத் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் மகளிர் தொழில்முனைவோரை தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி, பயிலரங்குகள் மற்றும் திறன் மேம்பாட்டு வீடியோக்களின் ஒரு முழுமையான தொகுப்பையும் இத்தளம் விரைவில் வழங்கவுள்ளது. மகளிருக்கு அறிவார்ந்த தகவல்களை பகிரவும், வழிகாட்டுதலை வழங்கவும் ஏதுவாக ஒரு சமூகத்துடன் இணைந்து செயல்படும் வசதியையும் கூடுதலாக வழங்கவுள்ளது. தொழில்துறையில் சாதிக்கத் துடிக்கும்  பெண்களுக்கு பிரிட்டானியா மேரி கோல்ட் மைஸ்டார்ட்அப்  போட்டியின் சீசன் 5-க்கு தடையற்ற  முழுமையான அணுகலை வழங்குவதோடு, ஹெர்ஸ்டோர் தளம் அவர்களை கூடுதலாகவும் ஊக்கவிக்கவுள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் தலைமை மார்கெட்டிங் அலுவலர் அமித் தோஷி, இந்த அறிமுகம் குறித்து கூறுகையில், "பிரிட்டானியா மேரி கோல்டில், மகளிர் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவர்களின் வளர்ச்சியை வளர்ப்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளோம். மைஸ்டார்ட்அப் போட்டியின் நான்கு வெற்றிகரமான சீசன்களிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களின் அடிப்படையில், எங்களது செயலமைப்பு சூழலை முழுமையான ஒன்றாக ஆக்குவதற்கு ஒரு பிரத்தியேக தளம் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம்; அதன் மூலமாகவே தொழில்முனைவோர் மேம்பட தொடர் வழிகாட்டுதல்களை வழங்க இயலும். எனவே இந்த மகளிர் தினத்தில் ஹெர்ஸ்டோர் உடன் அப்படியொரு சூழலை உருவாக்கத் தேவையான முதல் அடியை பெருமிதத்துடன் எடுத்து வைத்துள்ளோம். முதற்கட்டமாக ஹெர்ஸ்டோர் மார்கெட்பிளேஸ்-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள பரந்த அளவிலான பிரிட்டானியா மேரி கோல்ட் சமூகத்தின் ஆதரவுடன், ஒரு தொழிலை எளிதாக நிர்வகிக்க ஏதுவான செயலமைப்பு சூழலை மகளிர் தொழில்முனைவோர் ஜனநாயக அடிப்படையில் நிஜமாகவே பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று தெரிவித்தார்.

முல்லன்லோவ் லிண்டாஸ் நிறுவனத்தின், குரூப் சிஇஓ மற்றும் முல்லன்லோவ் குளோபல் நிறுவனத்தின், குரூப் & தலைமை ஸ்ட்ராடஜி அலுவலர் - அபாக் சுப்பிரமணியேஸ்வர் என்கிற சுப்பு கூறுகையில், இணையத்தில் டிஜிட்டல் தளத்தில் புரட்சியை ஏற்படுத்த ஹெர்ஸ்டோர் பெரிதும் உதவும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இது தொழில்முனைவை செயல்படுத்துவதற்கும், தினசரி விளையாட்டு வீராங்கனைகளின் (இல்லத்தரசிகளின்) வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் என்கிற பிராண்டின் உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது!”, என்றார்.

ஹாஷ் கனெக்ட் நிறுவனத்தின் தலைமை ஸ்ட்ராடெஜி அலுவலர், வினோத் குமார் இத்திட்டத்தின் தனித்துவமான சவால்களை குறித்து பேசுகையில்,. "ஹெர் ஸ்டோரை  உருவாக்குவதே தனித்துவமான சவால்களை முன்வைப்பதாக இருந்தது. எங்கள் ஈ-காமர்ஸ் துறையில் எங்களுக்குள்ள ஞானம், மற்றும் இந்திய நுகர்வோர் மனப்பாங்கு பற்றிய நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி - விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் பிராண்டு என மூன்று தரப்பினருக்கும் சிறந்த அனுபவத்தை உறுதியளிக்கும் ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்”, என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form