'மோட்டு பட்லு' சேகரிப்பு பேக் மூலம் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது, குளுக்கோவிட்டா போல்ட்ஸ்

ஆற்றல் உணவுப்பொருள் பிரிவில் முதன்மையான முன்னணி பிராண்டான குளுக்கோவிட்டா போல்ட்ஸ், இந்தியாவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு உரிமையாளரின் முதன்மை நிகழ்ச்சியான "மோட்டு பட்லுவிற்காக" நிக்கலோடியன்  உடனான தனது அற்புதமான கூட்டாண்மை பற்றி டிவிசி மூலம் அறிவித்தது. மிகப் பெரிய இந்திய ஊடக நிறுவனங்களில் ஒன்றின் வர்த்தகப் பிரிவான வயாகாம்18 கன்ஸ்யூமர் புராடக்ஸ் உடனான இந்த உத்திசார் ஒத்துழைப்பு இளம் வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவருதல், புதுமைகளை உருவாக்குதல் ஆகியவற்றை தொடர்ந்து செய்வது நோக்கமாகும், இது இப்பிராண்டின் ஒரு முக்கியமான ஒரு நிகழ்வைக் குறிக்கிறது.  

"மோட்டு பட்லு மேக்னட்" சலுகை, இந்தியாவின் நம்பர் 1 கார்ட்டூன் மோட்டு பட்லுவின் உலக ஆற்றலையும் வசீகரத்தையும் ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு போல்ட்ஸ் பேக்கிலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த மோட்டு பட்லு கதாபாத்திரங்களைக் கொண்ட சேகரிப்பு காந்தத்தைப் பெறுவார்கள். ஆற்றல் மற்றும் பொழுதுபோக்கின் இந்த கலவை, குழந்தைகளுக்கான ஸ்நாக் உண்ணும் அனுபவத்தை மேன்மைப்படுத்தி, நீண்டகால நினைவுகளையும் மகிழ்ச்சியின் தருணங்களையும் உருவாக்குகிறது.

இந்த கூட்டாண்மை குறித்து விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் - மார்க்கெட்டிங் துணைத் தலைவர் எஸ். பிரசன்னா ராய் "இந்தியாவின் நம்பர் 1 கார்ட்டூன் 'மோட்டு பட்லு' உடனான எங்கள் கூட்டமைப்பை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குளுக்கோவிட்டா போல்ட்ஸ் எப்பொழுதும் எங்கள் இளம் நுகர்வோரின் வாழ்க்கையில் புதுமையையும் உற்சாகத்தையும் கொண்டுவர முயற்சி செய்கிறது. எங்களின் 'மோட்டு பட்லு மேக்னட்' சலுகை மூலம், சத்தான மற்றும் மிகுந்த மகிழ்ச்சியான ஸ்நாக் உண்ணும் அனுபவத்தை உருவாக்க, மோட்டு பட்லுவின் மேஜிக்குடன் ஆற்றல் உலகைக் கலக்கிறோம்.” எங்கள் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் உறுதிப்பாடும், தரத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பும் எங்களை சந்தைத் தலைவராக ஆக்கியுள்ளது, மேலும் இந்த கூட்டாண்மையானது எங்களின் உறுதியான சிறந்த முயற்சிக்கு ஒரு சான்றாகும்” என்றார்.

வயாகம்18, கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் வணிகத் தலைவர் சச்சின் புண்டம்பேகர், “வயாகம்18 கன்ஸ்யூமர் புராடக்ட்ஸில் எங்கள் நோக்கம் எப்போதும் புதிய கூட்டாண்மை மூலம் நுகர்வோருக்கு புதுமையான புராடக்டுகளை வழங்குவதாகும். மோட்டு பட்லு, இந்தியாவின் நம்பர். 1 கார்ட்டூன் நாடு முழுவதும் விரும்பப்படுகிறது, மேலும் குளுக்கோவிட்டா போல்ட்ஸ் உடனான இந்த ஒத்துழைப்பு, இந்தியாவின் மிகவும் போற்றத்தக்க மற்றும் விரும்பப்படும் டூன்ஸ் இரட்டையர்களின் தடத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு படி மேலே உள்ளது” எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form