கெல்சாய் வோல்கானிக்கின் பங்குகளை கைப்பற்றிய கிளீயர் ப்ரீமியம்

 



இந்த ஆண்டின் சிறப்புமிக்க நடவடிக்கையாக கிளீயர் ப்ரீமியம் வாட்டர் நிறுவனம், எரிமலை நீரூற்றுகளில் இருந்து பெறப்படும் தனித்துவமான இயற்கை கனிம குடிநீருக்கான பிரபல நிறுவனமாக திகழும்  கெல்சாய் வோல்கானிக் வாட்டர் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை கிளீயர் ப்ரீமியம் வாட்டர் நிறுவனம் கையகப்படுத்தி இருப்பதன் மூலம், இது அந்நிறுவனத்தின் முக்கியமான வளர்ச்சிக்கான மைல்கல்லைக் குறிக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு பாட்டில் தண்ணீர் துறையில் புதுமையான முன்முயற்சியாக இதை இந்நிறுவனம் கருதுகிறது.  கெல்சாய் வோல்கானிக் குடிநீர் 200 மில்லி, 500 மில்லி மற்றும் 1 லிட்டர் அளவில் மக்கும் பெட் பாட்டில்களிலும், 300 மில்லி, 500 மில்லி மற்றும் 750 மில்லி கண்ணாடி பாட்டில்களிலும் கிடைக்கிறது.

கெல்சாய் வோல்கானிக் தண்ணீர் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கதைக்கு ஒரு சான்றாக உள்ளது. மலைகள் மற்றும் பாறைகளில் ஊடுருவி வரும்  இந்த மழைநீரானது, மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் தூய்மையை உள்ளடக்கி இருப்பதோடு இயற்கையாகவே ஒவ்வொரு துளியும் சுத்திகரிக்கப்பட்டு தூய்மையானதாக இருக்கிறது. இந்த செயல்முறையானது பிஎச் அளவை 7.5 முதல் 8.2 வரை சமநிலைப்படுத்துகிறது. கெல்சாய் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தி இருப்பதன் மூலம் கிளீயர் ப்ரீமியம் வாட்டர் நிறுவனம் தனது தாய் நிறுவனமான எனர்ஜி பெவரேஜஸ் பிரைவேட் லிமிடெட் மூலம், கெல்சாய் குடிநீர் விற்பனையை இந்தியா முழுவதும் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஆரோக்கியமான குடிநீரை வினியோகம் செய்ய முடியும் என்று கிளீயர் ப்ரீமியம் வாட்டர் நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

இது குறித்து கிளீயர் ப்ரீமியம் வாட்டர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான நயன் ஷா கூறுகையில், கெல்சாய் வோல்கானிக் வாட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதன் மூலம், இயற்கையான கனிமங்கள் நிறைந்த குடிநீருக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த கூட்டணியானது கெல்சாய் குடிநீர் வர்த்தகத்தை வளர்ச்சி பெறச் செய்வதோடு,  ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் நிறைந்த குடிநீரை மக்களிடம் கொண்டு செல்வதற்கும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த கூட்டணியின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மற்றும் குறைபாடற்ற சேவையை எங்களால் வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form