புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஏனாம் பகுதியில் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் ரீஜென்சி செராமிக்ஸ்



இந்திய டைல்ஸ் துறையில் முன்னோடி நிறுவனமாக விளங்கும் ரீஜென்சி செராமிக்ஸ் நிறுவனம், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து, ஏனாம் பகுதி முழுவதும் 3 ஆயிரம் பழ மரக்கன்றுகளை நடும் பணியில் இறங்கி உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் காடுகளின் பரப்பை இரட்டிப்பாக்க புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டுள்ள 'புதுச்சேரி பசுமைப் பணி' முயற்சிக்கு ரீஜென்சி செராமிக்ஸ் தனது முழு ஆதரவையும் வழங்கி உள்ளது.  

ஏனாமில் உள்ள ரீஜென்சி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏனாம் எம்.எல்.ஏ., ஜி. ஸ்ரீனிவாஸ் அசோக், பசுமை பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். இதில் ஏனாம் மண்டல நிர்வாக அலுவலர் மௌனிசாமி, பொறுப்பு நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மரம் நடும் பிரச்சாரமானது, ஏனாமின் சுற்றுச்சூழல் நலனுக்கு புத்துயிர் அளிப்பதில் ரீஜென்சியின் பங்களிப்பை காட்டுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பலா, சீத்தா, ஜாமுன், கொய்யா மற்றும் நெல்லிக்காய் போன்ற பூர்வீக பழ மரங்களையும் மஹாகோனி, குல்மோஹர், ரோஸி டிரம்பெட், மஞ்சள் சுடர் மரம் மற்றும் க்ரீப் மிர்ட்டல் போன்ற அவென்யூ மரங்களும் நடப்பட உள்ளன.  மேலும் இப்பகுதியின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்நிறுவனம் தங்கள் செயல்பாடுகளை ஏனாமில் மீண்டும் தொடங்கி, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரீஜென்சி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் சத்யேந்திர பிரசாத் நாராலா கூறுகையில், எங்கள் நிறுவனம் எப்பொழுதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, சமூகம் சார்ந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத கொள்கைகளை கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளது. பசுமை நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் பங்களிப்பின் ஒரு பகுதியாக, ஏனாம் முழுவதும் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்த முயற்சியில் இறங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form