ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் முதல் கிளை கோவையில் திறப்பு



சிறு நிதி வங்கிகளில் இந்தியாவின் பெரிய வங்கியாக திகழும் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது புதிய கிளையை கோவையில் அவினாசி சாலையில் திறந்துள்ளது.இந்த புதிய கிளையை கோவையில் திறந்து இருப்பதன் மூலம் தமிழகத்தைப் பொறுத்தவரை இதன் கிளை 5 ஆக உயர்ந்துள்ளது. தென்னிந்தியாவின் 'ஜவுளி தலைநகரம்' அல்லது 'மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் கோவை, தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையமாகவும், இரண்டாவது பெரிய வர்த்தக நகரமாகவும் திகழ்கிறது. 

கோவை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்கள், ஜவுளி ஆலைகள், பண்ணைகள் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலைகள் என ஏராளமாக உள்ளது. அவினாசி சாலை கோவையில் முக்கிய பகுதியாக கருதப்படுவதால் ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கி தனது புதிய கிளையை இங்கு திறந்திருக்கிறது.

புதிய கிளை திறப்பு குறித்து ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் குழுமத் தலைவர் ரிஷி தரிவால் கூறுகையில், ”வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற சிறு நிதி வங்கியாக எங்கள் வங்கி திகழ்கிறது. கோவையில் எங்கள் வங்கியின் புதிய கிளை திறப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். அவற்றை வாடிக்கையாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். வரும் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பரவலாக எங்கள் வங்கி கிளையை திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கடந்த டிசம்பர் மாதத்துடன் எங்கள் வங்கியின் டெபாசிட் தொகையானது 3 ஆயிரம் கோடியை கடந்து உள்ளது. இது எங்கள் வங்கி கிளைகளை இப்பகுதியில் மேலும் திறக்க எங்களுக்கு உத்வேகத்தை தருகிறது. எங்களுக்கு தென்னிந்தியாவில் தற்போது 19 கிளைகள் உள்ளன. வரும் காலத்தில் இன்னும் புதிய கிளைகளை திறக்க உள்ளோம். இந்த நிதியாண்டில் மேலும் கூடுதலாக 18 கிளைகளை திறப்பதன் முதல் படியாக கோவையில் எங்களின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் தென்னிந்தியாவில் எங்களின் வங்கி கிளைய 34 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form