இந்தியாவின் மிகச்சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா, அதன் ஜி சீரிஸ் உரிமை உடைமை வரிசையில் கூடுதலாக புத்தம் புதிய மோட்டோ ஜி34 5ஜி ஃபோன் அறிமுகப்படுவதை அறிவித்தது. ஸ்நாப்டிராகன் 695 5ஜி ஆக்டா கோர் பிராசசருடன் இணைந்து இந்தப் பிரிவில் மிக உயரிய 13 5ஜி பேண்ட்ஸ், விஓஎன்ஆர் ஆதரவு மற்றும் 4 கேரியர் வரையிலான கூட்டியக்கத்துடன் இந்தப் பிரிவிலேயே அதிவேக 5ஜி செயல்திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் ஒருஅதிரடி மாற்றத்தை விளைவிக்கும். கூடுதலாக, வேகன் லெதர் ஃபினிஷ் அத்துடன் 3டி அக்ரிலிக் க்ளாஸ் ஃபினிஷ் (பிஎம்எம்ஏ) ஒன்றிணைந்த மோட்டோ ஜி34 5ஜி இந்தப் பிரிவிலேயே மிகக் குறைவான எடையுடன் மிக மெல்லிய வடிவமைப்புடனும் மனதைக் கொள்ளை கொள்ளும் ப்ரீமியம் தோற்றத்தை பெருமிதத்தோடு காட்சிப்படுத்துகிறது.
மேலும் மோட்டோ ஜி34 5ஜி, சமீபத்திய புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 14, 50எம்பி கேமரா அமைப்பு, டால்பி அட்மோஸ் கொண்டு டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 120எச்இசட் 6.5 இஞ்ச் டிஸ்ப்ளே உட்பட இந்தப் பிரிவின் பல்வேறு தலைசிறந்த அம்சங்களுடன் வருவதோடு சேர்ந்து கூடுதலாக மோட்டோ செக்யூர், ஃபேமிலி ஸ்பேஸஸ், மோட்டோ அன்ப்ளக்ட், மோட்டோ கனெக்ட் மற்றும் தனிநபர் கணினி இயக்கத் தயார் நிலை போன்ற அம்சங்களின் ஒரு தொகுப்பு இந்த பிரிவிலேயே இதை ஒரு மிகச்சிறந்த 5ஜி ஸ்மார்ட்ஃபோனாக விளங்கச்செய்கிறது
ஸ்நாப்டிராகன் 695 5ஜி ஆக்டோ கோர் பிராசசர் பொருத்தப்பட்ட இந்தப் பிரிவிலேயே அதிவேக 5ஜி செயல்திறனுடன் இயங்கும் மோட்டோ ஜி34 5ஜி எளிதான பல்பணியாக்கம் மற்றும் கேமிங் செயலாற்றலை வழங்குகிறது. உள்ளமைக்கப்பட்ட 4ஜிபி அல்லது 8ஜிபி ரேம் என இரு வேறு மாறுபட்ட ரேம் அமைப்பு மற்றும் 16ஜிபி வரை விரிவாக்கிக் கொள்வதற்கான மேலுயர்த்தும் அம்சம் கொண்ட மிகப்பெரிய சேமிப்பகம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுடன் 1டிபி வரை விரிவாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பிரமாண்டமான 128ஜிபி யுஎப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் வரும் மோட்டோ ஜி34 5ஜி பயனர்களுக்கு மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. 13 5ஜி பேண்ட்ஸ், விஓஎன்ஆர் ஆதரவு, மற்றும் 4 கேரியர் வரையிலான கூட்டியக்கம் போன்ற மேம்பட்ட 5ஜி தொழில்நுட்ப அமைப்புக்களால் நிரப்பப்பட்ட மோட்டோ ஜி34 5ஜி இந்தப் பிரிவிலேயே மிகச்சிறந்த 5G செயலாற்றல் படைத்த ஒன்றாகத் திகழ்கிறது.
வடிமைப்பைப் பொறுத்தவரை, ஒஷன் க்ரீன் வண்ணத்தில் சூப்பர்-பிரீமியம் வேகன் லெதர் ஃபினிஷ் அத்துடன் சேர்ந்து 3டி அக்ரிலிக் கிளாஸ் ஃபினிஷுடன் ஐஸ் ப்ளூ மற்றும் சார்க்கோல் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் தனித்துவமாகக் காட்சியளிக்கிறது. . அதுமட்டுமின்றி, 7.98 மி.மீ. திக்னஸ் மற்றும் 179 கிராம் என்ற அளவில் குறைந்த எடையுடன் ஈடு இணையற்ற மெல்லிய பளபளப்பான கொண்ட வடிவமைப்பை பெருமிதத்தோடு பறைசாற்றுகிறது. மேலும் கூடுதலாக நீர் எதிர்ப்புத் திறனில் ஐபி 52 தரமதிப்பீட்டுடன் வழங்கப்படும் மோட்டோ ஜி34 5ஜி நீர் சிதறல் மற்றும் நீர் தெளிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்கிறது
க்வாட் பிக்ஸல் தொழில்நுட்பத்துடனான மேம்பட்ட 50 எம்பி திறன் கொண்ட பிரதான கேமரா பொருத்தப்பட்ட மோட்டோ ஜி34 5ஜி, சவால் மிகுந்த குறைந்த ஒளி நிலைகளிலும் புகைபடங்கள் கற்பனையோடு கலந்து பிரகாசமாக இருப்பதை உறுதி செய்து குறைந்த ஒளியிலும் நம்பமுடியாத அளவிற்கு துல்லியமான, உயிர்த்துடிப்புடன் கூடிய புகைப்படங்களை வழங்கி பயனர்களின் புகைப்பட அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கிறது. புதுமையான இமேஜ் ஆட்டோ என்ஹான்ஸ் அம்சத்துடன் வழங்கப்படும். நுகர்வோர் தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு இயற்கையான அல்லது மேம்படுத்தப்பட்ட/ பிரகாசமான வண்ணங்களில் புகைப்படங்களை ஷுட் செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கி இந்தப் பிரிவில் மிகவும் மேம்பட்ட புகைப்படக்கலை அனுபவத்தை அளிக்கிறது. கேமராவில் ஆடியோ ஜூம், ஸ்பாட் கலர், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், ஜெஸ்ச்சர் கேப்ச்சர், மற்றும் ஆட்டோ நைட் விஷன் மோட் போன்ற பிரீமியம் மென்பொருள் அம்சங்களையும் மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.
மோட்டோ ஜி34 5ஜி இன் பொருத்தப்பட்டுள்ள 16 எம்பி முன்புறக் கேமரா, இந்தப் பிரிவிலேயே மிக மேம்பட்ட பகுதிறன் (ரெசொல்யூஷன்) கொண்ட கேமராக்களில் ஒன்றாகும், மற்றும் சமூக ஊடகங்களுக்கான தயார் நிலை செல்ஃபி புகைப்படங்களை துல்லியமாகவும் மற்றும் உயிர்த்துடிப்புடனும் காட்சிப்படுத்துகிறது. கூடுதலாக, மோட்டோ ஜி34 5ஜி இன்ஸ்டாகிராமுக்குகந்த தகுதியான வீடியோக்கள் மற்றும் மிக நெருக்கமாக புகைப்படங்களை பிடிப்பதற்கென்றே தனிப்பயனாக்க மைக்ரோ விஷன் கேமராவையும் கொண்டுள்ளது.தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத் தொடர்புக ஆகியவற்றோடு சமீபத்திய புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 14 மென்பொருள் போனின் செயல்திறனை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச்செய்கிறது.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்ய இதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்டி ஃபிஷிங் மற்றும் ஆட்டோ லாக் அம்சங்களுடன் கூடிய மோட்டோ செக்யூர் 3.0 வசதிகளுடனும் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. உங்களுக்குப் பிடித்தமான மொபைல் கேம்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உங்கள் டிவியின் பெரிய திரையில் வெளியிட அல்லது உங்கள் ஃபோன் ஆப்ஸ் மற்றும் பிசி கோப்புகள் அனைத்தையும் ஒரே டிஸ்பிளேயில் அணுக, குழந்தைகளுக்கான ஃபேமிலி ஸ்பேஸ், மோட்டோ கனெக்ட் மற்றும் ரெடி ஃபார் பிசி (8ஜிபி வேரியண்டில் மட்டும் கிடைக்கும்), பிரசித்தி பெற்ற மோட்டோ ஜெஸ்ச்சர்ஸ் உடன் இறுதி நிலை தனிப்பயனாக்க அனுபவத்துக்கான டிஜிட்டல் வெல்பீயிங்குக்கு உதவ மோட்டோ அன்ப்ளக்ட் மற்றும் புத்தம் புதிய மை யுஎக்ஸ் அம்சம். பாதுகாப்பை எளிதாக உறுதிசெய்யும் வகையில் பக்கவாட்டில் கைரேகை ரீடர்/பவர் பட்டன் காம்போ பொருத்தப்பட்டு வருகிறது.
மோட்டோ ஜி34 5ஜி வின் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.5" டிஸ்ப்ளே மென்மையான கேம்ப்ளே, பல்பணியாக்கம் மற்றும் ஸ்க்ரோலிங் செயல்பாடுகளை தடையற்ற வகையில் பயனர்களுக்கு வழங்குகிறது. மிக மிக மெல்லிய பெசல்கள் மற்றும் நவீன பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே தொழில்நுட்ப அம்சங்கள் அடங்கிய பெருமையை கொண்ட அகலமான திரை, திரைப்படங்கள், கேம்களை காண்பதையும் வீடியோ சாட் செய்யும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தையும் மேலும் மேம்படுத்துகிறது.
கூடுதலாக, திரையில் தோன்றும் காட்சிகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் அதற்கேற்ப புதுப்பிப்பு வீதம் தானாகாவே சரிசெய்து கொள்கிட்டது. . குறைந்த அளவிலான 240எச் இசட் டச் ரேட் லேட்டன்சியுடன் பயனர்கள் அவர்கள் வழக்கமாக காணும் காட்சிகளுக்கு மாறாக அதிக வினைத்திறனுடன் கூடிய காட்சிகளை கண்டு அனுபவிக்க முடியும். அத்துடன் டால்பி அட்மாஸ் உடன் டியூன் செய்யப்பட்ட இரண்டு பெரிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒலியை பல பரிமாணத்திலும் மற்றும் ஸ்டுடியோ-தரத்திலும் வழங்கி இந்த ஆழ்ந்த காட்சிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது. இந்த ஹை ரெஸ் சான்றளிக்கப்பட்ட ஒலி அமைப்பு, விரிவான ஆற்றல் மிக்க ஈடு இணையற்ற தெளிவான துல்லியமான ஒலியை இசை ஆர்வலர்களுக்கு வழங்குவதை உறுதி செய்கிறது. நுண்ணறிவுடன் கூடிய ஒலி ஆற்றல் பெருக்கம் மற்றும் ஒத்திசைந்து இயங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்ட இந்த கருவி துல்லியமான, தெளிவான மற்றும் திடமான ஒலி வழங்கப்படுவதை உறுதி செய்கிறது .
உங்களுக்கு விருப்பமான உள்ளடக்கங்களை அனுபவித்து மகிழும் வகையில் உண்மையில் ஒரு ஆழமான பொழுதுப்போக்கு அனுபவத்தை வழங்குகிறது. மோட்டோ ஜி34 5ஜி, அதன் 5000 எம்ஏஎச் ஆற்றல் கொண்ட அதன் பிரமாண்டமான பேட்டரியுடன் பல நாட்களுக்கு நீடித்த சக்தியை வழங்குகிறது, இது நீண்ட பிளேலிஸ்ட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் அதிலேயே மூழ்கிக் கிடக்கும் செயல்பாடுகளுக்கு மிகப் பொருத்தமானதாக அமைகிறது.
டர்போ பவர் 20வாட் சக்தி கொண்ட சார்ஜர் பல மணி நேரங்களுக்கான சக்தியை ஒரு சில நிமிடங்களில் வழங்கி மோட்டோ ஜி34 5ஜி போனை அதி விரைவில் சார்ஜ் செய்து விடுகிறது. இந்த ஆற்றல் மிக்க கூட்டு அமைப்பு அன்றாட நாடாடிக்கைகளின் போது தடை ஏற்ப்பட்டுவிடுமோ என்ற கவலையை அகற்றி ஒரு தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது.
அறிமுக விழாவைத் தொடங்கி வைத்து பேசிய மொபைல் பிசினஸ் குரூப் - இந்தியாவின் நிர்வாக இயக்குனர் டி.எம்.நரசிம்மன் கூறுகையில், "மோட்டோ ஜி34 5ஜி அறிமுகத்தின் மூலம் இந்த ஆண்டை ஒரு உயர்ந்த நிலையிலிருந்து தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். 5ஜி ஸ்மார்ட்போன் வகைப் பிரிவிலேயே மிகச் சிறந்த அனுபவங்களை ஒரு பரந்த அளவில் நாடு முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். இந்த ஸ்மார்ட்போன் ஒரு முழுமையான, எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாத குறைந்த விலையில் எளிதாக அடையக் கூடிய ஒரு 5G கருவி. வேகன் லெதர் ஃபினிஷ் , சமீபத்திய புத்தம் புதிய ஆண்ட்ராய்ட்ட 14 மற்றும் இதர ஸ்டேட் ஆஃப் ஆர்ட் வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் 5ஜி திறனை முழுமையாக பயன்படுத்தி உள்ளடக்கங்களையும் இன்னும் பலவற்றையும் பயனர்கள் தடையற்று அனுபவித்து மகிழ்வதற்கு உதவும் ஒரு மிக ஆற்றல் மிக்க பிராசசரை கொண்டிருப்பதை இது பறைசாற்றுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தரத்திற்கான புதிய வரையறைகளை நிர்ணயிக்கும் மற்றும் 5ஜி தொழில்நுட்பம் இந்திய ஸ்மார்ட்போன் தொழில் துறையில் ஏற்றுக்கொள்ளப்படுவதை துரிதப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்", என்றார்.
மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட், மோட்டோரோலா டாட் இன், மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் 2024 ஜனவரி 17 அன்று மதியம் 12 மணியிலிருந்து விற்பனைக்கு வரும். முன்பாகவே ஆர்டர் செய்வதற்கு வசதியாக, இந்தக் கருவி ஜனவரி 9 ஆம் தேதியன்று மதியம் 12 மணியிலிருந்து 2 மணிவரை ப்ளிப்கார்ட் இல் பிரத்யோகமாகக் கிடைக்கும். அப்போது முன்பாகவே ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.2,800 பெறுமான கருவிப் பாதுகாப்பு அமைப்பை இலவசமாகப் பெறுவார்கள்
அறிமுக விலை : 4ஜிபி ரேம் + 128 ஜிபி நினைவகத்துடன் : ரூ. 10,999 மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி நினைவகத்துடன் : ரூ. 11,999 ஆகும். எக்ஸ்சேஞ்ச் இன் போது ரூ.1000 கூடுதல் சலுகை கிடைக்கும்