மதுரையில் அலன் கரியர் இன்ஸ்டிட்யூட்டின் முதல் கிளை துவக்கம்

 தேர்வு தயாரிப்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அலன் கரியர் இன்ஸ்டிட்யூட் பிரைவேட் லிமிடெட் 2024 - 2025 கல்வி ஆண்டில், கோவில் நகரமான மதுரையில்  அதன் வழிகாட்டுதல் முயற்சியைத் துவங்கியுள்ளது.  இது மதுரையைச் சேர்ந்த  8 முதல் 12 படிக்கும் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் மற்றும் தேசிய அளவிலான இன்ஜினியரிங் கல்விக்கு முந்தைய மற்றும் மெடிக்கல் கல்விக்கு முந்தைய நுழைவுத் தேர்வுகளுக்கான வழிகாட்டுதலை வழங்கும்.  டி.எஸ் எண் 4422/1பி, பி.டி. ரஞ்சன் சாலை, பிபிகுளம், மதுரை-625002 எனும் முகவரியில் அலன் மதுரை வளாகம் அமைந்துள்ளது.


இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதித்துறை சாராத உறுப்பினர் டாக்டர் எம். ராஜாராம் ஐஏஎஸ் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு வழிகாட்ட மதுரையை அடுத்த நகரமாக தேர்வு செய்த அலன் கரியர் இன்ஸ்டிட்யூட்-ன் இந்த நடவடிக்கையை வரவேற்ற அவர், இந்த வாய்ப்பை இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு, தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென மாணவர்களை வாழ்த்தினார். மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் பல அதிக திறமையான மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென கூறினார்.அலன் தென்னிந்தியாவின் முதன்மையான வேதியியல் பாடத்தில் முதன்மையான ஆசிரியர், தங்கப்பதக்கம் பெற்றவர் மற்றும் தெற்கு பகுதியில் வழிகாட்டுதல் முயற்சிகளை எடுத்துச் செல்லும் அலன் மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ் பேசுகையில் "கோவில் நகரமான மதுரையின் மாணவர்களை அலனுக்குள் தங்களின் கனவுகளோடும், உயர்ந்த இலக்கோடும், சிறப்பாகச் சாதிக்குமாறும் அழைப்பதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மதுரையைச் சேர்ந்த திறமைசாலிகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றியின் உச்சத்தை அடைய மீனாட்சி அம்மனின் ஆருளாசியை வேண்டுகிறேன்” என்றார்.


இந்நிகழ்ச்சியில், மையத் தலைவர் சந்தோஷ் சிங் பேசுகையில், “அலன் மதுரையில் வெற்றிக்கான ஒரு புதிய அளவுகோலை உருவாக்க நான் உறுதியளிக்கிறேன், மேலும் வரும் ஆண்டுகளில் அலன் மதுரை தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்குவதை நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form