ராயல் என்ஃபீல்டு அதன் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் திருவிழாவான மோட்டோவெர்ஸ் 2023-இல் புதிய ஹிமாலயனை அறிமுகப்படுத்தியது. புதிய ஹிமாலயன் இப்போது இந்தியாவில் சில்லறை விற்பனையில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது, மேலும் 2024 மார்ச் முதல் ஐரோப்பா முழுவதும் கிடைக்கும். இந்த மோட்டார் சைக்கிள் யுகே-இல் 5,750 யுரோ மற்றும் ஐரோப்பா முழுவதும் 5900 யுரோ என்ற தொடக்க விலையில் கிடைக்கும். இந்தியாவில், ஹிமாலயன், 2023 டிசம்பர் 31 வரை இந்திய ரூபாய் 2,69,000 என்ற சிறப்பு அறிமுக விலையில் கிடைக்கும்.
அனைத்து புதிய ஹிமாலயன் 3 வேறுபட்ட வேரியன்ட்டுகளை உள்ளடக்கிய வலுவான வரிசையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. பேஸ், பாஸ், சம்மிட் மற்றும் இமயமலையின் கூறுகளால் ஈர்க்கப்பட்ட 5 வண்ணங்களின் பேலட்- காசா பிரவுன், ஸ்லேட் சீரிஸ்-பாப்பி ப்ளூ, ஹிமாலயன் சால்ட், ஹான்லே பிளாக் மற்றும் கமெட் ஒயிட் (சம்மிட்-டாப் வேரியன்ட்)ஆகியவை அடங்கும்.
அதிகச் சக்தி மற்றும் டார்க்குடன், இது ராயல் என்ஃபீல்டின் முதல் திரவ-குளிரூட்டப்பட்ட என்ஜின் ஆன புதிய 452சிசி ஷெர்பா எஞ்சினுடன் சிறந்த குறைந்த-ஆர்பிஎம் செயல்திறனை வழங்குகிறது. புதிய ஆறு-வேக கியர்பாக்ஸ் மற்றும் ரைடு-பை-வயர் அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆற்றல், சவாலான நிலப்பரப்புகளுக்கு பவர் மற்றும் டார்க்கின் உகந்த விநியோகத்தை வழங்குகிறது.இது புதிய டிரிப்பர் டாஷ் மற்றும் 30க்கும் மேற்பட்ட அற்புதமான புதிய அசல் மோட்டார் சைக்கிள் துணைப்பாகங்கள் அனைத்து புதிய ஹிமாலயனில் வருகிறது, ஒவ்வொரு வகையான சாகசத்திற்கும் ஏதுவாக உள்ளது. வளைந்த மலைச் சாலைகளில் பயணிப்பதாக இருந்தாலும் சரி அல்லது சவாலான ஆஃப்-ரோடு பாதைகளைச் சமாளிப்பதாக இருந்தாலும் சரி, புதிய ஹிமாலயன் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளின் வெளியீட்டு விழாவில் ராயல் என்ஃபீல்டு சிஇஓ பி.கோவிந்தராஜன் பேசுகையில், “புதிய ஹிமாலயன் ஒரு பரிணாமத்தை பிரதிபலிக்கிறது, ரைடரின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது ஒரு உண்மையான உலகளாவிய மோட்டார் சைக்கிள் ஆகும், இது உலகளவில் சாகச சுற்றுலா வாகனப் பிரிவில் புதிய தரத்தை அமைக்கத் தயாராக உள்ளது. எங்களின் பியூர் மோட்டார் சைக்கிள் தத்துவத்திற்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள எங்கள் ஆர்வமுள்ள சமூகத்திற்காக வரவிருக்கும் சவாரி காலண்டரை நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்” என்றார்.