வரானியம் நிறுவனம் 205.4% வளர்ச்சி



 மும்பையைச் சேர்ந்த டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனமான வரானியம் கிளவுட் லிமிடெட், மொத்த வருமானம் மற்றும் நிகர லாபத்தில் வலுவான வளர்ச்சியுடன் வணிக நடவடிக்கைகளில் அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நிறுவனம் 23 – 24 ஆம் நிதியாண்டின்  முதல் பாதியில் செப்டம்பர் முடிவடைந்த நிலையில் ரூ. 96.25 கோடி நிகர லாபம் அடைந்து வளர்ச்சி பெற்றுள்ளது. இது 22-23 ஆம் நிதியாண்டில் ரூ.26.37 கோடியாக இருந்தது மற்றும் சென்ற ஆண்டை விட 265% வளர்ச்சி அடைந்துள்ளது. 23-24ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் செயல்பாடுகளின் மொத்த வருமானம் ரூ. 377.33 கோடி ஆகும். இது 22 - 23 நிதியாண்டின் முதல் பாதியின் மொத்த வருமானமான ரூ.123.55 கோடியில் இருந்து 205.4% வளர்ச்சி அடைந்துள்ளது. 24ஆம் நிதியாண்டின் முதல் பாதியின் இபிஎஸ்க்கான ஒரு பங்கு ரூ.22.44 ஆகும்.

சமீபத்தில், இவிஎல்ஐ எமர்ஜிங் ஃபிரான்டியர் ஃபண்ட் அக்டோபர் 11 மற்றும் 12, 2023 அன்று மொத்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தில் மொத்தம் 4.76 லட்சம் பங்குகளை வாங்கியது. இது நிறுவனத்தில் ரூ.10.45 கோடியை முதலீடு செய்தது.

அக்டோபர் 9, 2023 நடந்த போர்டு மீட்டிங்கில், வணிகச் செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துணை நிறுவனங்களைத் திறக்க நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. திரு. விநாயக் வசந்த் ஜாதவ் உடனடியாக பதவி ஏற்கும் வகையில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நிறுவனம் சமீபத்தில் தனது ரூ. 49.46 கோடிக்கான உரிமைகள் வெளியீட்டை வெற்றிகரமாக முடித்தது. இதன் மூலம் மூலதனத் தேவைகள், நிதி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக உபயோகிக்கப்பட்டது.

முடிவடைந்த 2022 - 23ஆம் ஆண்டு நிதியாண்டில் வலுவான நிதி முடிவுகளை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் 22ஆம் நிதியாண்டின் வருவாய் ரூ.35.35 கோடியை விட 23ஆம் நிதியாண்டின் வருவாய் 984% ஆக அதிகரித்து ரூ.383.37 கோடியாக உள்ளது. 22ஆம் நிதியாண்டின் நிகர லாபம் ரூ.8.4 கோடியிலிருந்து 23ஆம் நிதியாண்டில் 917%ஆக அதிகரித்து ரூ.85.46 கோடியாக உள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி கையிருப்பு மற்றும் உபரி ரூ. 91.22 கோடி மற்றும் சொத்துக்கள் ரூ. 183.99 கோடி ஆகும், என்று வரானியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form