2 புதிய வண்ணங்களில் அறிமுகமாகும் ஓப்போ ஏ79 5ஜி



ஓப்போ இந்தியா,  அதன் புத்தம் புதிய ஏ79 5ஜி அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவைஸ் அக்டோபர் 28, 2023 முதல் அமேசான்,  பிளிப்கார்ட் மற்றும் பிற ரீடெயில் விற்பனை நிலையங்களில் ரூ. 19,999 என்ற விலையில் கிடைக்கிறது. ஓப்போவின் ஏ79 5ஜி குளோயிங் கிரீன் மற்றும் மிஸ்ட்ரி பிளாக் நிற விருப்பங்களில் கிடைக்கிறது. வெறும் 193கிராம் எடையும் வெறும் 7.99மிமீ மெல்லியதாகவும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை ஓப்போ அறிவித்துள்ளது, தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

 மெயின்லைன் ரீடெயில் விற்பனையிலிருந்து ஒன் கார்டு விற்பனை நிலையங்கள் மற்றும் ஒப்போ ஸ்டார்களில் இருந்து 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் ரூ. 4000 வரை கேஷ்பேக் பெறலாம். வாடிக்கையாளர்கள் முன்னணி பைனான்சியர்களிடமிருந்து ஜீரோ டவுன் பேமெண்ட் திட்டங்களைப் பெறலாம்.

இதன் பின்புற மேற்பரப்பானது கேமரா லென்ஸை சுற்றி டூயல் பாலிஷ் செய்யப்பட்ட ரிங்குகளுக்கு கவர்ந்திழுக்கும் ரெக்ட்டாங்குலர் ஐலண்ட் கொண்டுள்ளது. தனித்துவமான கையாளப்பட்ட அதன் வலுவான பாலிகார்பனேட் ஃபிரேமிற்கு ஒரு உலோக அமைப்பைக் கொடுக்கும் அதன் தனித்துவமான வடிவமைப்பு விஷயங்களில் ஒன்றாகும். ஐபி54-மதிப்பிடப்பட்ட ஸ்மார்ட்போன் 320 க்கும் மேற்பட்ட தர சோதனைகள் மற்றும் டிராப், ஆண்ட்டி-ஸ்பிளாஸ், ரேடியேஷன், தீவிர வானிலை, ஃபையர் மற்றும் ஃபிளேம் தடுப்பு, வெப்பநிலை பாதுகாப்பு மற்றும் கைவினைத்திறன் மற்றும் தரம் உறுதிப்படுத்தும் சிக்னல் சோதனைகள் ஆகியவை உட்பட 130 தீவிர நம்பகத்தன்மை சோதனைகளுக்கு உட்பட்டது.

பஞ்ச்-ஹோல் கேமராவுடன் 6.72-இன்ச் எஃப்எச்டி+ சன்லைட் டிஸ்ப்ளே, 90ஹர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆல்-டே ஏஐ கம்போர்ட், 12.5 எம்பி ஸ்னாப்ஷாட்களை எடுக்கும் 50எம்பி ஏஐ கேமரா, ஒரு 2எம்பி ப்ரோட்ரைட் கேமரா,  களத்தின் டெப்தை கண்டறிய 2எம்பி ஆம்னிவிஷன் ஒவி02பி1பி,  ஒரு 8எம்பி செல்பி கேமரா,  2.2ஜிஎச்இசட் ஆர்ம் கோர்டெக்ஸ் - ஏ76 செயல்திறன் கோர்கள் மற்றும் சிக்ஸ் 2ஜிஎச்இசட் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ55 செயல்திறன் கோர்களைக் கொண்ட மீடியாடெக் 6020 எஸ்ஓசி, சிப்செட் மீடியாடெக்கின் ஹைப்பர்என்ஜின் 3.0 லைட் கேமிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 13 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர் ஓஎஸ் 13, சாட் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரும்போது தனியுரிமைக்கான ஆட்டோ பிக்சலேட் மற்றும் மோசடிகளில் இருந்து முக்கியமான ஆவணங்களைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட தனியுரிமை பாதுகாப்பு, சாதனத்தை 30 நிமிடங்களுக்குள் 51 சதவிகிதம் வரை சார்ஜ் செய்கிற 33 வாட் சூப்பர் விஓஓசிடிஎம் கொண்ட ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

ஓப்போ ஏ9 5ஜி ஸ்பீக்கர்களுக்கு 300 சதவிகிதம் மற்றும் இயர்பீஸ் கால்களுக்கு 200 சதவிகிதம் வரை 100 சதவிகித ஒலி அளவை மீறுகிற வகையில் அல்ட்ரா வால்யூம் பயன்முறையையும் கொண்டுள்ளது; ஸ்மார்ட்போன் வயர்டு சவுண்டுக்காக 3.5எம்எம் ஹெட்போன் போர்ட் உடன் வருகிறது. சிப்செட் மிகவும் பிரபலமான ஆப்களை 82 சதவிகிதம் வேகமான ஆப் மாறுதல் வேகத்துடன் துரிதப்படுத்துகிறது. மீடியாடெக் 6020 இன் டூயல்-சிம் நிலையான 5ஜி வேகம் மற்றும் விஓஎன்ஆர் வழங்குகிறது என்பதை உறுதி செய்கிறது. ஸ்மார்ட்போன் 1டிபி மைக்ரோ எஸ்டி கார்டுகள் வரை 128 ஸ்டரோஜ் மற்றும் ஆதரவைக் கொண்டுள்ளது. டிவைஸ் ஸ்ட்ரோரேஜிலிருந்து 8ஜிபி ரேம் மற்றும் ஓப்போவின் ரேம் விரிவாக்க தொழில்நுட்பத்துடன் மற்றொரு 8ஜிபி பெற்று மல்டிடாஸ்க்கிங் மென்மையானது என ஓப்போ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form