மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 2023 அன்று "ராமநாதபுரம் கலாம் ஹாஃப் மாரத்தான்" நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஹாஃப் மாரத்தான், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், உலக அளவில் போற்றப்படும் தலைவருமான டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது.
இந்த மாபெரும் மாரத்தான் போட்டியில் 500 பேர் கலந்து கொண்டனர். இதனை இஸ்ரோ தலைவர் திரு.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார். 21 கி.மீ. ஓட்டமானது காலை 5.00 மணிக்கும், 5 கி.மீ. ஓட்டமானது காலை 6.00 மணிக்கும் தொடங்கியது. இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை ரூ. 2,00,000/- த்துடன் அவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றியாளர்கள் விவரம் பின்வருமாறு:
21 கிமீ ஆண்கள் பிரிவில் திரு.லட்சுமணன் முதல் பரிசு ரூ.50,000, திரு.வினோத் குமார் இரண்டாம் பரிசு ரூ.25,000, திரு.ரங்கராஜ் 3வது பரிசு ரூ.10,000 பெற்றனர். பெண்கள் பிரிவில் சுகன்யா முதல் பரிசு ரூ.50,000, விஐய் வைஷ்ணவி இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மனோன்மணி ராம்நாத் 3வது பரிசு ரூ.10,000 பெற்றனர். 5 கிமீ ஆண்கள் பிரிவில் திரு. மாரி சரத் முதல் பரிசு ரூ.10,000, திரு.அகில் ராம் இரண்டாம் பரிசு ரூ.5,000 மற்றும் திரு.பரிசு வசந்த் 3வது பரிசு ரூ.10,000 பெற்றனர். பெண்கள் பிரிவில் அப்ஸ்ரீ முதல் பரிசு ரூ.10,000, அனிதா இரண்டாம் பரிசு ரூ.5,000 மற்றும் லலிதா 3வது பரிசு ரூ.3,000 பெற்றனர்.
ராமநாதபுரம் கலாம் ஹாஃப் மாரத்தான் ஒரு விளையாட்டு நிகழ்வு மட்டுமல்ல; உலகில் அழியாத முத்திரையைப் பதித்த தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவருக்கு இது இதயப்பூர்வமான அஞ்சலி. இந்த மாரத்தான் இரண்டு பந்தய பிரிவுகளைக் கொண்டிருந்தது. இதில் அனைத்து வயதினரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அசாதாரண சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை தற்போதைய தலைமுறையினர் அறிந்திருப்பதை உறுதி செய்வதே இந்த மாரத்தானின் முதன்மை நோக்கமாகும். வெற்றியாளர்களை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், வரும் ஆண்டுகளில் டாக்டர் கலாமின் பிறந்தநாளை அவரது சொந்த ஊரில் கொண்டாடுவதற்கான முன்னோடியாகவும், அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு தேசிய மேடையை வழங்குகிறது.
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டாடுவதில் அனைத்து வயதினரையும் ஒன்றிணைக்கும் ராமநாதபுரம் கலாம் ஹாஃப் மாரத்தான் ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக இருந்தது. பங்கேற்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.