டைட்டன் ஐ பிளஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் பரிசோதனை நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. கண்களின் ஆரோக்கியத்தையும் அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும், இதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு பிராந்தியத்தில் உள்ள மதுரை, சென்னை, கோவை ஆகிய இடங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண்பரிசோதனை நடத்திட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் டைட்டன் ஐ கேர் பிரிவு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான டைட்டன் ஐ பிளஸ் டாஷ் கான்டெஸ்ட் 2023-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் பிராண்டின் விளம்பரத்தூதராக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பையும் பெறலாம். இதற்கான போட்டிகள் 24 செப்டம்பர் 2023ல் தொடங்கி 15 அக்டோபர் 2023 வரை நடைபெறுகின்றன என டைட்டன் ஐ பிளஸ் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.