மோட்டோவின் பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷல் அறிமுகம்



இந்தியாவின் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு முன்னதாக, ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத குறைவான விலையில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று, இரவு 7 மணி முதல், வாடிக்கையாளர்கள் மோட்டோரோலா எட்ஜ், மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ சீரிஸ் போன்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை நம்பமுடியாத கவர்ச்சிகரமான விழாக்கால சிறப்பு பிக் பில்லியன் டேஸ் விற்பனை விலையில் வாங்கலாம்.  பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷலாக,  மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ, முதன்முறையாக ரூ.19,999 முதல் எதிர்பாராத விலையில் விற்பனைக்கு  வருகிறது.

இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த 5ஜி ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி54 5ஜி  அக்டோபர் 8 முதல் 8+128 ஜிபி மற்றும் 12+256 ஜிபி வகைகள் முறையே ரூ 12,999 மற்றும்  14,999 விலையில் வெளிவரவுள்ளன. அட்டகாசமான விலையில் ரூ. 16,999க்கு, மோட்டோ ஜி84 5ஜி ஆனது வெளியாகவுள்ளது.   ஸ்னாப்டிராகன் 680 மூலம் இயக்கப்படும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஸ்மார்ட்போன், மோட்டோ ஜி32 நம்பமுடியாத விலையில்  8,999* வெளிவரவுள்ளது.

8 ஜிபி ரேம் & 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்தியாவின் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போன், மோட்டோ இ13 2+64ஜிபி, 4+64ஜிபி, 4+128ஜிபி மற்றும் 8+128ஜிபி ஆகியவை ரூ.5,399, ரூ. 5,849, ரூ.8,999 மற்றும் ரூ. 6,749 எனும் மாபெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கவுள்ளது.  மேலும், அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் பிக் பில்லியன் டே அன்று சலுகை விலையில், மோட்டோரோலா எட்ஜ் 40  ஸ்மார்ட்போனையும் பயனர்கள் வாங்கலாம். மோட்டோ இ32வை ரூ. 8,099 க்கு வாங்கலாம். மோட்டோ ஜி14 4+128ஜிபி ரூ.8,099க்கும் மோட்டோ ஜி73 ரூ.14,999க்கும், மோட்டோ எட்ஜ் 30 8+128ஜிபி ரூ.25,999க்கும் மோட்டோ எட்ஜ் 30 ஃப்யூசன் ரூ. 29,999க்கும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா 12+256ஜிபி ரூ. 39,999 க்கும் சிறப்பு தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம் என மோட்டோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form