லேப்டாப் பிரிவில் நுழையும் டெக்னோ


 

டெக்னோ நிறுவனம், தனது புதிய மெகாபுக் டி1 என்னும் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான சிறப்பு விற்பனை அமேசான் இணையதளத்தில் துவங்கி உள்ளது. அதன் தனித்துவமான வடிவமைப்பிற்காக ஜெர்மன் ரெட் டாட் விருதை இந்த லேப்-டாப் பெற்றுள்ளது. சிறந்த செயல்திறன் மற்றும் அழகான வடிவமைப்பு ஆகியவற்றை விரும்பும் நுகர்வோருக்கு ஏற்ற வகையில் இந்த லேப்டாப் உள்ளது. இது டெனிம் ப்ளூ, ஸ்பேஸ் கிரே மற்றும் மூன்ஷைன் சில்வர் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இண்டல் கோர் ஐ7 16இபி + 1டிபி எஸ்எஸ்டி ரூ.59,999/- சிறப்பு விலையாக ரூ.57,999க்கும், இண்டல் கோர் ஐ5 16ஜிபி + 512ஜிபி எஸ்எஸ்டி ரூ.49,999/- சிறப்பு விலையாக ரூ. 47,999க்கும்,  இண்டல் கோர் ஐ3 8ஜிபி + 512ஜிபி எஸ்எஸ்டி ரூ.39,999/- சிறப்பு விலையாக ரூ.37,999க்கு கிடைக்கிறது.

மெகாபுக் டி1 லேப்டாப் மிகவும் மெல்லிய தோற்றத்தில் 14.8மிமீ தடிமனுடன், 1.56 கிலோ எடையைக் கொண்டுள்ளது. பிரீமியம் நானோ-அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் நீடித்து உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.180 டிகிரியில் வளையும் தன்மை கொண்ட இந்த லேப்டாப்பை பயனர்கள் அவர்களின் விருப்பதிற்கேற்ப கையாள முடியும். 15.6 இன்ச் எப்எச்டி+ டிஸ்பிளே மற்றும் 350 நிட்ஸ் பிரைட்னஸ், 100 சதவீத ஆர்ஜிபி வரம்பைக் கொண்டுள்ளது. இதில் உள்ள டிஸ்பிளே நீங்கள் உட்புறங்களில் இருந்தாலும் வெளிப்புறங்களில் இருந்தாலும் துல்லியமாக தெரியும் வகையில் உள்ளது. மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் வகையில் இதில் கைரேகை சென்சாருடன் ஒருங்கிணைக்கப்பட்ட 2-இன்-1 பவர் கீ மற்றும் 2எம்பி எப்எச்டி கேமராவுடன் வருகிறது. இதில் உள்ள டிடிஎஸ் எக்ஸ் தொழில்நுட்பம் தரமான மற்றும் தெளிவான ஆடியோவை வழங்குகிறது.

இதில் இன்டல் 11 ஜென் புராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப கோர் ஐ3, கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. இதில் 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான அதிவேக எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் டிஸ்க் ஆகியவை உள்ளன. இதில் 70வாட் பேட்டரி புதிய தரநிலைகளை கொண்டிருப்பதோடு, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இதை 17.5 மணிநேரம் பயன்படுத்த முடியும். இதில் 65வாட்ஸ் பிடி அல்ட்ரா-பாஸ்ட் சார்ஜர் இந்த லேப்டாப்பை வேகமாக சார்ஜ் செய்கிறது. மேலும் இதில் உள்ள, சூப்பர் லார்ஜ் விசி கூலிங் சிஸ்டம் லேப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கிறது.

மெகாபுக் டி1 லேப்டாப் குறித்து டெக்னோ மொபைல் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரிஜீத் தலபத்ரா கூறுகையில், எங்களின் இந்த புதிய லேப்டாப் சிறந்த செயல்திறன் மற்றும் அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதோடு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.  மேலும் எங்களின் மெகாபுக் டி1 லேப்டாப், பயனர்களின் வாழ்க்கையில் எந்தவித தடையும் இல்லாத புதுமையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான எங்கள் பிராண்டின் அர்ப்பணிப்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form