இந்தியாவில் ஹோண்டா எலிவேட் அறிமுகம்இந்தியாவில் பிரீமியம் கார்களை தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், அதன் சமீபத்திய உலகளாவிய எஸ்யுவி-ஆன ஹோண்டா எலிவேட்-ஐ அறிமுகப்படுத்தியது . இந்த வாகனம் ரூ.10,99,900 முதல் டாப் வேரியண்ட் ரூ.15,99,900வரையிலான  அறிமுகவிலையில் கிடைக்கும். நாட்டில் உள்ள டீலர்ஷிப்களில் செப்டம்பர் 4 முதல் எலிவேட்டரின் டெலிவரி தொடங்கியுள்ளது.  சிங்கிள்-டோன் மற்றும் டூயல்-டோனில் ஈர்க்கக்கூடிய வண்ணத் தேர்வுகளில் எலிவேட் வழங்கப்படும் .

 ஃபீனிக்ஸ் ஆரஞ்சு பேர்ல் (புதிய நிறம்), அப்சிடியன் புளு பேர்ல், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் வொயிட் பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக் மற்றும் மீட்டியராய்டு கிரே மெட்டாலிக்  ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வரம்பு சாலையில் கவனத்தை ஈர்க்கும் வகையில் பார்வைக்கு குறிப்பிடத்தக்க தோற்றத்தை உருவாக்குகிறது . ஹோண்டா எலிவேட் வாடிக்கையாளர்களுக்கு நிலையான நன்மையாக 3 வருட வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் முழுமையான மன அமைதியை வழங்கும். வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும், எப்போது வேண்டுமானாலும் 10 ஆண்டுகள் வரை உத்தரவாதத்தையும் மற்றும் கார் வாங்கிய தேதியிலிருந்து சாலையோர உதவியையும் தேர்வு செய்யலாம்.

ஹோண்டா எலிவேட் 'அர்பன் ஃப்ரீஸ்டைலர்' என்ற சிறந்த கருத்தாக்கத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலிவேட் ஒரு1.5லிட்டர் ஐ-வி டெக் டிஒஎச்சி  பெட்ரோல் எஞ்சின் மூலம் 89 கிலோ வாட் ஆற்றலையும் 145 என் எம் முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.  4312மிமீ நீளம், 1790மிமீ அகலம், 1650மிமீ உயரம், 2650மிமீ வீல்பேஸ் மற்றும் உயர்தர கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய பரிமாணங்களுடன் வருகிறது. 

 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7-ஸ்பீடு கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் எரிபொருள் திறன் முறையே 15.31 கிமி/லி மற்றும் 16.92 கிமி/லி ஆகும். கம்பீரமான மற்றும் ஆண்மை ததும்பும் வெளிப்புற வடிவமைப்பு,  உயர்தர வீல்பேஸ், விசாலமான ஹெட்ரூம், முழங்கால் அறை, லெக்ரூம் மற்றும் வகையினத்தில் சிறந்த கார்கோ ஏரியா, மெலிதான மற்றும் கூர்மையான ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல் -கள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் கொண்ட முழு எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், டூ-டோன் ஃபினிஷ் டைமண்ட் கட் ஆர்17 அலாய் வீல்களுடன் வருகிறது.

மேலும், 17.78 செ.மீ உயர்-வரையறை முழு வண்ண டிஎஃப்டி மீட்டர் கிளஸ்டர்,  இன்-பிளேன் ஸ்விட்ச்சிங், எல்சிடி தொடுதிரை காட்சி ஆடியோ, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்,  டாஷ்போர்டு மற்றும் டோர் டிரிம்ஸில் மென்மையான டச் பேட்களுடன் கூடிய ஆடம்பரமான பிரவுன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, ஹோண்டா கனெக்ட் புதிய மற்றும் அற்புதமான அம்சங்களைப் பெறுகிறது- திரையில் ஷார்ட்கட் விட்ஜெட்டுடன் தனிப்பயனாக்கப்பட்ட டைனமிக் டாஷ்போர்டு, டிஜிட்டல் சேவை பிக்-அப் & டிராப் வசதி, எச்பிசிஎல் நெட்வொர்க் மூலம் எரிபொருள் கட்டணத்தில் கூடுதல் வெகுமதி புள்ளிகள்,  துணைக்கருவிகளின் ஒருங்கிணைப்பு - டிபிஎம்எஸ், டிவிஆர்,  சிறந்த 5 ஆண்டு இலவச சந்தா தொகுப்பு ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

பாதுகாப்பிற்கான ஹோண்டாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, ஹோண்டா சென்சிங்கின் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் உட்பட, நேரடி மற்றும் மறைமுக பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் விரிவான வரம்பைக் கொண்டுள்ளது.  எலிவேட்- ல் ஏசிஇ பாடி அமைப்பு, 6 காற்றுப்பைகள், எச்-கனெக்டுடன் இணைக்கப்பட்ட மசாஜர், லேன் வாட்ச் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், மல்டி ஆங்கிள் ரியர்-வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் , ஐஎஸ்ஓபிக்ஸ் இணக்கமான பின் பக்க இருக்கைகள், கீழ்மட்ட ஆங்கரேஜ்கள், டாப் டீத்தர் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி-யின் இந்திய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி  டகுயா சுமுரா, "அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடுத்தர அளவிலான எஸ்யுவி-யான ஹோண்டா எலிவேட்-ஐ அறிமுகப்படுத்துவது ஒரு அற்புதமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மிகவும் உற்சாகமான ஆட்டோ பிரிவுகளில் ஒன்றில் நாங்கள் கால்பதிக்கிறோம். குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்குகிறது. இந்திய சந்தையில், உலக அளவில் அறிமுகமானதில் இருந்து, எலிவேட் வாடிக்கையாளர்களிடமிருந்து மிகச்சிறந்த விருப்பத்தையும்  வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆவலுடன் காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்காக அதன் விலையை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எலிவேட் - ன் வளர்ச்சி விரிவான ஆராய்ச்சி மற்றும் விலைமதிப்பற்ற வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு சான்றாகும் "என்று கூறினார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form