பண்டிகைக் காலங்களில் வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் ; இன்டீட் ஆய்வில் தகவல் இன்டீட் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நிறுவனங்களின் பணியமர்த்தல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.  இந்த ஆய்வு 1,127 நிறுவன முதலாளிகள் மற்றும் 2,593 வேலை தேடுபவர்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு இன்டீட் சார்பில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையில் வாலுவோக்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. விடுமுறை காலமானது பணியமர்த்தல் மற்றும் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சிறப்பான பலன்களும் அதேசமயம் பாதிப்புகளும் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வேலை தேடுபவர்களின் வேண்டுகோளை பூர்த்தி செய்யும் வகையில், நிறுவனங்கள் பெரும்பாலும் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கேட்பதை வழங்க தயாராக உள்ளன. இருப்பினும், சில பலன்கள் என்று வரும்போது, வேலை தேடுபவர்களும் முதலாளிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேலை தேடுபவர்களில் 16 சதவீதம் பேர் பண்டிகை கால ஊக்கத் தொகைகள் மற்றும் பரிசுகளை விரும்புகிறார்கள், ஆனால் 9 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இதை வழங்க தயாராக உள்ளன. 69 சதவீத நிறுவனங்கள் இந்த பண்டிகைக் காலத்தில் தற்காலிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவே அதிக அளவில் விரும்புவதாக இந்த ஆய்வு தெரிவிப்பதாக இன்டீட் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form