ஓப்போ இந்தியா நிறுவனம் ஓப்போ கே13 5ஜி-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஆற்றல் திறன் மற்றும் பிரீமியம் பயனர் அனுபவத்துடன் "அதிகச் சக்திவாய்ந்த" செயல்திறன் அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 6 ஜென் 4 மொபைல் தளத்தால் இயக்கப்படும் இந்த சாதனம், 80வாட் சூப்பர் வோக் வேகமான சார்ஜருடன் 7000 எம்ஏஎச் கிராஃபைட் பேட்டரி, இப்பிரிவில் முன்னணி விசி கூலிங், 120எச்இசட் ஃபுல் எச்டி ப்ளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் இன்டெலிஜென்ட் நெட்வொர்க் ஆப்டிமேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சீரான பலவேறு பணி, அதிவேக கேமிங், நீண்டகால பேட்டரி ஆயுள், நம்பகமான இணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. ஓப்போ கே13 5ஜி, அதன் பிரிவில் செயல்திறனை மறுவரையறை செய்ய மேம்பட்ட என்ஜினீயரிங் மற்றும் ரீஃபைன்ட் வடிவமைப்பை இணைத்து அர்த்தமுள்ள புதுமைக்கான ஓப்போவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
8ஜிபி+128ஜிபி வேரியன்ட்டின் விலை ரூ.17,999 ஆகவும், 8ஜிபி +256ஜிபி வேரியன்ட்டின் விலை ரூ.19,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 25 முதல் ஓப்போ இ ஸ்டோர் மற்றும் Flipkart தளத்துல் நண்பகல் 12 மணி முதல் ஐஸி பர்ப்பிள் மற்றும் பிரிஸம் பிளாக் ஆகிய இரு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நுகர்வோர், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிச் சலுகைகள் அல்லது ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் விற்பனை நாளில் மட்டுமே ரூ.1000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் முறையே ரூ.16,999 மற்றும் ரூ.18,999 ஆக இறுதி விலையில் கிடைக்கும். கூடுதல் அறிமுகச் சலுகைகளில் ஆறு மாதங்கள் வரை விலையில்லா ஈஎம்ஐ அடங்கும், இது ஓப்போ கே13 5ஜி இன் ஒட்டுமொத்த மதிப்பு முன்மொழிவை மேலும் மேம்படுத்துகிறது.
புதிய அறிமுக குறித்து ஓப்போ நிறுவனத்தின் புராடெக்ட் கம்யூனிகேசன் ஹெட் சாவியோ டிசோசா கூறுகையில், “ஓப்போ கே 13 மூலம், ரூ.20,000க்கு கீழ் உள்ள பிரிவுக்கு சமரசம் இல்லாமல் ஒரு ஓபி அனுபவத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். சக்தி வாய்ந்த, நம்பகமான தொழில்நுட்பத்தை ஜனநாயகப் படுத்துவதற்கும், முன்பை விட அதிகமான பயனர்களுக்கு முதன்மை நிலை அம்சங்களை அணுகுவதற்கும் ஓப்போவின் நோக்கத்தை இந்த சாதனம் பிரதிபலிக்கிறது” என்றார்.