கோடைக்கால திருமண வைபவங்களைக் கொண்டாட தனிஷ்க் அறிமுகப்படுத்தும் ரிவா நகைத் தொகுப்பு



அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தனிஷ்கின் திருமண நகைகளுக்காக துணை பிராண்டான ரிவா, கோடைக்காலத்தில் வரவிருக்கும் இந்தியத் திருமண வைபவங்களை மகிமைப்படுத்த அற்புதமும் கலைநயமும் கொண்ட மணப்பெண்களுக்கான நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் திருமணச் சடங்குகளும் மரபுகளும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. இதை ஆழமாகப் புரிந்துகொண்ட தனிஷ்கின் திருமண நகைத்தொகுப்பான ரிவா, நிச்சயதார்த்தம் முதல் முகூர்த்தம், வரவேற்பு வரை வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்றவாறு முழுமையான நகைகளை வடிவமைத்துள்ளன.

தனிஷ்கின் ரிவா, மணப் பெண்ணுக்கான நகைகளை வடிவமைத்து அளித்துள்ளது. கலாச்சார செழுமையுடன் கூடிய தற்கால வடிவமைப்பு நுட்பங்களும் சேர்ந்த நகைகளை ரிவா அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நகையும் 100 நாட்களுக்கு மேல் காலம் எடுத்துக்கொண்டு கடினமான வேலைப்பாடுகள், காலம் பிடிக்கும் தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டது. 

நகாஷி செதுக்கல், கோவில் உருச்செதுக்கல், காசுமாலை இணைப்பு, சிவப்புக்கல் வேலைப்பாடு, முத்து வேலைப்பாடு, குறுமணி வேலைப்பாடு, தென்னிந்திய வகை சரிகை வேலைப்பாடுகள். விரியக்கூடிய சோக்கர்கள் மற்றும் மாங்காய் ஆரங்கள் தொடங்கி வங்கிகள், நெக்லேஸ்கள், ஒட்டியாணம் ஆகியவை விஸ்தாரமான விவரங்களுடன், கம்பீரமாகவும் அந்தரங்கமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.. திருமணப் பட்டுப் புடவைகளுக்கு பொருத்தமான வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு நகையும் கைவினைத்திறன் மற்றும்  நுணுக்கமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன.

தனிஷ்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான பெல்கி ஷெரிங் கூறுகையில், ”திருமண நகைகளுக்கான பிராண்டாக ‘ரிவா’ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தற்போது தங்க நகைகளின் விலை உச்ச நிலையில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் வாங்குவதற்காகவும் மணப்பெண் நகைகளை வடிவமைத்துள்ளோம். ரிவா கோல்டன் அட்வான்டேஜ் ஸ்கீம் மூலம் நகைகளின் மாறும் விலைகள் தாக்கம் செலுத்தாமல் இருக்கவும் வழிசெய்யப்படுகிறது. இதன்மூலம் வாடிக்கைஆயளர்கள் தங்களது கனவு நகைகளை வாங்கமுடிகிறது.” என்றார்.

பண்டிகைக் காலத்தில் கடைக்குச் சென்று நகைகள் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, தனிஷ்க் தனது தங்க நகைகளின் செய்கூலிக்கும், வைர நகைகளின் மதிப்பில் 20% வரையும் தள்ளுபடி வழங்கும்  மதிப்பு வாய்ந்த திட்டத்தை அறிவித்துள்ளது. தங்க நகை வாங்குபவர்களுக்கு கிராமுக்கு 101 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. முன்பேயே புக்கிங் செய்பவருக்கு கோல்ட் ரேட் ப்ரொடக்ஷன் மூலம் விலை உயர்வு பாதிக்காத பாதுகாப்பும் உண்டு. எந்த நகைக்கடையில் பழைய நகையை வாங்கியிருந்தாலும் அந்த பழைய நகைகள் 100% பரிமாற்ற விலையில் வாங்கப்படு

Post a Comment

Previous Post Next Post

Contact Form